டெக்னோ ஸ்பார்க் கோ 2020 நாளை அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்!

|

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 நாளை அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ-வை விட கூடுதல் அம்சங்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020

டெக்னோ ஸ்பார்க் கோ 2020

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 செப்டம்பர் 1 நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளத்தின் கிடைக்கும் தன்மையை குறித்து முன்னதாகவே பிளிப்கார்ட்டில் உறுதிப்படுத்தியுள்ளது. பிளிப்கார்ட்டில் காட்டப்படும் இந்த பட்டியலில் டெக்னோ ஸ்பார்க் கோ 2020 முக்கிய அம்சங்களையும் விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2020: வெளியீடு

டெக்னோ ஸ்பார்க் கோ 2020: வெளியீடு

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 செப்டம்பர் 1 நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்மாதிரி பிளிப்கார்டில் வெளியிடப்பட்டது. செல்பி கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் கீழ் சிறிய வகை வாட்டர் டிராப் ஸ்டைல் காணலாம். ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. பட்டன்கள் குறித்து பார்க்கையில் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

வண்ணங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை

வண்ணங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனை

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 நீல நிற அம்சத்தில் கிடைக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தும் சமயத்தில் கூடுதல் வண்ணங்களையும் காட்டலாம். பிளிப் கார்ட் டீஸரின் மூலம் இது இகாமர்ஸ் இணையதளத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இன் விலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அது நாளை வெளியீட்டின்போது விவரங்கள் கிடைக்கும். டெக்னோ ஸ்பார்க் கோ கடந்த ஆண்டு ரூ .5,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேட்டரி மற்றும் பிற விவரங்கள்

பேட்டரி மற்றும் பிற விவரங்கள்

பிளிப்கார்ட் பட்டியல் டெக்னோ ஸ்பார்க் கோ 2020 பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது, ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே இருக்கும் எனவும் இது கடந்தாண்டு வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ-வை விட பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என உறுதிப்பட தெரிகிறது. கூடுதலாக, பிளிப்கார்ட் பக்கத்தில் டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இன் பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டிருக்கும் என்பதை காட்டுகிறது. கேமரா விவரங்கள் உட்பட மற்ற பிற அம்சங்கள் இதுவரை கிடைக்கவில்லை. பிற அனைத்து விவரங்களும் நாளை அறிமுகத்தின் போது கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tecno Spark go 2020 Launching on September 1: Here the Expected Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X