கண்ணீர் சிந்தும் சியோமி போன் பயனர்கள்: அவசரப்பட்டு புது 5ஜி போன் வாங்காதீங்க!

|

Xiaomi நிறுவனம் ஏறத்தாழ தங்களது அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஜியோ 5ஜி சேவைக்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை வெளியிட்டுவிட்டது. இருப்பினும் குறிப்பிட்ட ப்ரீமியம் சியோமி போன்களுக்கு மட்டும் Jio 5G சேவை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

சியோமி 5ஜி

சியோமி 5ஜி

சியோமி நிறுவனம் ஜியோ உடன் கூட்டு சேர்ந்து தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்தும் விதமான சாஃப்ட்வேர் அப்டேட்டையும் சியோமி தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிட்டது. ஏணைய சியோமி ஸ்மார்ட்போன்கள் ஏர்டெல் 5ஜி சேவைக்கான அணுகலையும் பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தான் இதுகுறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ ட்ரூ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவை ஏறத்தாழ 133 நகரங்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. டெல்லி-என்சிஆர், ஜெய்பூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் ஜியோ 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கி உள்ளது.

சாஃப்ட்வேர் அப்டேட் அவசியம்

சாஃப்ட்வேர் அப்டேட் அவசியம்

ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்த பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி அணுகலை பெறும் வகையிலான சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்ய வேண்டும். இந்த சாஃப்ட்வேர் அந்தந்த மொபைல் நிறுவனங்கள் தங்களது மொபைலுக்கு வெளியிட வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைக்கான அப்டேட்டை வெளியிடத் தொடங்கிவிட்டது.

ஜியோ வெல்கம் ஆஃபர்

ஜியோ வெல்கம் ஆஃபர்

ஜியோ 5ஜி சேவை பெறுவதற்கு மற்றொரு நிபந்தனை ஜியோ வெல்கம் ஆஃபரை பெற வேண்டும் என்பதுதான். இதற்கு ரூ.239க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்தாலே போதுமானது. உங்கள் மொபைல் 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது, 5ஜி அப்டேட்டை பெற்றுவிட்டது என்றால் தானாக இந்த வெல்கம் ஆஃபர் கிடைக்கும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் மொபைலில் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்கு சென்று நெட்வொர்க் தேர்வில் 5ஜி என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.

ப்ரீமியம் போன்களில் 5ஜி சேவை கிடைக்கவில்லை

ப்ரீமியம் போன்களில் 5ஜி சேவை கிடைக்கவில்லை

அதன்படி ஏறத்தாழ அனைத்து சியோமி போன்களும் ஜியோ 5ஜி சேவைக்கு தயாராகிவிட்டது என்று தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், குறிப்பிட்ட ப்ரீமியம் சியோமி 5ஜி போன்களில் 5ஜி ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

டெலிகாம் டாக் அறிக்கையின்படி, 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவில் முன்னணியில் சென்றுக் கொண்டிருக்கும் சியோமி இன் குறிப்பிட்ட இரண்டு ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஜியோ 5ஜி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மறுபுறம் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 5ஜி சேவைக்கான அப்டேட்டே பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஜியோ 5ஜி சேவை அணுகல் கிடைக்காத இரண்டு சியோமி 5ஜி ஸ்மார்ட்போன்கள் Xiaomi Mi 10 மற்றும் Xiaomi Mi 10i ஆகும். இந்த இரண்டும் சியோமியின் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இரண்டு ஸ்மார்ட்போன்களும் சுமார் ரூ.50,000 விலைப் பிரிவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

சற்று கூடுதல் செலவு செய்தால் ஐபோனே வாங்கிவிடலாம் என்றாலும் கூட சியோமி மீது நம்பிக்கைக் காரணமாக ஏணையோர் ரூ.50,000 செலவில் இந்த இரண்டு போனை வாங்கி இருக்கின்றனர்.

இந்தநிலையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போனுக்கும் 5ஜி அணுகல் கிடைக்காமல் இருப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குறிப்பிட்ட சியோமி மற்றும் ரெட்மி போன்களுக்கான 5ஜி ஆதரவை நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவை, Xiaomi 11T Pro 5G, Xiaomi 11 Lite NE 5G, Xiaomi 11i 5G, Xiaomi 11i HyperCharge 5G, Mi 11 Ultra 5G, Mi 11X 5G, Mi 11X Pro 5G, Xiaomi 12 Pro 5G, Redmi Note 10T 5G, Redmi Note 11T 5G, Redmi 11 Prime 5G, Redmi Note 11 Pro+ 5G, Redmi K50i 5G ஆகும்.

5ஜி ஓஎஸ் அப்டேட்

5ஜி ஓஎஸ் அப்டேட்

இந்த ஸ்மார்ட்போன் கொண்ட பயனர்கள் தங்களது போனில் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம். சியோமி, ரெட்மி மட்டும் அல்ல அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அந்தந்த ஸ்மார்ட்போனுக்கான 5ஜி ஓஎஸ் அப்டேட்டை வெளியிடத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Tearful Xiaomi Phone Users: Jio 5G is Not Available For these xiaomi phones: Do You Know the Reason?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X