ரூ.4000/- பட்ஜெட்டில் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Meganathan
|

ஸ்வைப் டெக்னாலஜீஸ் நிறுவனம் 4ஜி VoLTE தொழில்நுட்பம் கொண்ட ஸ்வைப் எலைட் 2 பிளஸ் எனும் புதிய கருவியினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டூயல் சிம் கொண்ட இந்தக் கருவியின் விரிவான சிறப்பம்சங்களைப் பார்ப்போமா?

திரை

திரை

ஸ்வைப் எல்டை 2 பிளஸ் கருவியில் 5-இன்ச் FWVGA (480x854 பிக்ஸல்) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவாட் கோர் SC9830A பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை இந்தக் கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

அதிகத் துல்லியமான புகைப்படங்களை எடுக்க ஏதுவாக 5 எண்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி VoLTE, வை-பை 802.11 b/g/n, ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, 3.5 எம்எம் ஜாக், ப்ளூடூத் 4.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இவற்றைச் சக்தியூட்ட 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

விற்பனை

விற்பனை

இந்திய சந்தையில் ரூ.4,444 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் புதிய ஸ்வைப் எலைட் 2 பிளஸ் கருவியானது பிரத்தியேகமாகப் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Swipe Elite 2 Plus With 4G VoLTE Support Launched at Rs. 4,444

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X