ஆப்பிள் வாட்ச்சால் ஜிம்மிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?

|

15 ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகள், மப்டியில் வந்த போலீசார், ஆம்புலன்ஸ், டாக்டர் என்று எல்லோரும் திடீரென உங்கள் முன் அதிரடியாகத் தோன்றினால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நிச்சயமாக, உங்கள் நெஞ்சம் பதறிவிடும் தானே.! இல்லையென்றால், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழப்பத்தில் மூழ்கிப் போய்விடுவீர்கள் தானே.!

இப்படி ஒரு சம்பவத்தை சும்மா விளையாட்டிற்காக உங்களை யூகிக்கச் சொல்லவில்லை. உண்மையிலேயே, இந்த சந்தர்ப்பத்தை ஒருவர் நேரில் சந்தித்திருக்கிறார். அதிலும், இந்த சந்தர்ப்பத்தில் அவரை சுற்றி 15 ஆயுதம் ஏந்திய காவல் அதிகாரிகள் தோன்ற காரணமாக இருந்தது யார் தெரியுமா? ஒரே ஒரு ஆப்பிள் வாட்ச் (Apple Watch) தான். இன்னும் சரியாகச் சொல்லப் போனால், ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆன சிரி (Siri) தான் இதற்கெல்லாம் காரணமாம்.

ஆப்பிள் வாட்ச்சால் ஜிம்மிற்குள் நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.!

கடந்த செவ்வாயன்று, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஜிம்மில் ஒரு 'ஜோடி' பெர்சனல் ட்ரைனர் உடன் மிகவும் கடுமையான வொர்கவுட்டில் களமிறங்கிய போது, இந்த சூழ்நிலை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. PTJ Gladesville இல் ஒரு தனிப்பட்ட ஜிம் பயிற்சியாளர், அவருடைய பிரைவேட் கிளைன்ட்டிற்கு வொர்கவுட் கற்பித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரது ஆப்பிள் வாட்ச் தற்செயலாக சிரியை இயக்கி, அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுத்து, 15 ஆயுதமேந்திய போலீஸ் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைந்து வரவைத்துள்ளச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. news.com.au இன் அறிக்கையின் படி, PTJ Gladesville ஜிம் இல் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர் தனது கிளைன்ட்டிற்கு உடற்பயிற்சி பற்றிக் கற்பித்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய ஆப்பிள் வாட்ச் தற்செயலாக சிரியை இயக்கிவிட்டது.

சிரி சேவை உடனடியாக அவசர சேவையை தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. அவசரக்கால சேவைக்கு அழைப்பு சென்றதும், அதிகாரிகள் ​​ஜிம்மில் எதோ துப்பாக்கிச் சூடு அல்லது ஒருவேளை தற்கொலை போன்ற அவசரநிலை உதவி தேவைப்படுவதாகக் கருதியுள்ளனர். இதன் விளைவாக, சுமார் 15 ஆயுதம் தாங்கிய போலீஸ் அதிகாரிகள் ஜிம்மிற்கு விரைந்தனர். அதிரடியாக ஜிமிற்குள் அதிகாரிகள் ஆயுதங்களுடன் நுழைந்த போது, பயிற்சியாளரையும் அவரது கிளைன்ட்டையும் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

ஆப்பிள் வாட்ச்சால் ஜிம்மிற்குள் நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.!

ஜிம் டிரைனருக்கும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முழித்திருக்கிறார். அவரை சுற்றி மப்டியில் வந்த அதிகாரிகள் உட்பட சுமார் 15 அதிகாரிகள் தோன்றியுள்ளனர். வெளியே பல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் மருத்துவர் உதவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. அதிகாரிகள் அனைவரும் ஜிம் உள்ளே சென்றனர், அதில் ஒருவர் மட்டும் இங்கே யார் Jamie Avery என்ற நபர் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஜிம் டிரைனர், அது அவர் தான் என்பதை அடையாளம் காண்பித்து, அவருடைய பெயர் Jamie Alleyne என்று கூறியிருக்கிறார். எதற்காக அவசர உதவியை அழைத்தீர்கள் என்று கேட்டபோது, தன்னிடம் ஃபோனே இல்லை என்று அவர் எடுத்துரைத்திருக்கிறார். பிறகு தான், உடற்பயிற்சியின் போது அவர் கூறிய சில வார்த்தைகளால் சிரி சேவை இயக்கப்பட்டு, அவசர உதவிக்கு அழைப்பு சென்றுள்ளதை அவர் உணர்ந்திருக்கிறார். அப்படி என்ன வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார் என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், அவர் அந்த அழைப்பை விடுக்கவில்லை என்றும், அது தனது ஆப்பிள் வாட்ச் மூலம் ஏற்பட்ட தவறான எச்சரிக்கை கால் என்றும் அவர் காவல்துறையிடம் விளக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் மூலம், சிரி அல்லது வேறு ஏதேனும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சாதனத்தை இயக்கும்போது, நாம் சொல்லும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.

இனி ஆப்பிள் வாட்ச் அணிந்திருக்கும் ஒவ்வொருவரும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தையின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Siri Causes False Alarm At Gym And 15 Armed Police Officers Arrived To The Spot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X