வருது வருது விலகு விலகு: சீனாவில் ஹிட் அடித்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் OPPO!

|

Oppo Reno 8 சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ தேதியை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. Oppo Reno 8 சீரிஸ்களில் ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ என்ற இரண்டு சாதனங்கள் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போனின் ப்ரோ மாடலில் 6.62 இன்ச் முழு HD+ AMOLED E4 டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

80W Super Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங்

80W Super Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங்

ரெனோ 8 தொடரில் இரண்டு மாடல்கள் இருக்கும். அது ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ஆகும். ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் முழு HD+ AMOLED E4 டிஸ்ப்ளே மற்றும் ரெனோ 8 சாதனம் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு சாதனங்களும் 80W Super Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கலாம்.

எப்போது வெளியாகும்?

ஒப்போ நிறுவனம் ஒப்போ 8 ரெனோ ஸ்மார்ட்போன் தொடரை விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதிய தொடரில் இரண்டு சாதனங்கள் அடங்கும். சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Oppo Reno 8 Pro+ குறித்த எந்த தகவலும் தற்போது வரை இல்லை. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு ஒப்போ நிறுவனம் ரெனோ 7 தொடரை அறிமுகம் செய்தது. தொடர்ந்து தற்போது நிறுவனம் ரெனோ 8 தொடரை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஒப்போ நிறுவனம் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மைக்ரோசைட்

ஒப்போ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரெனோ 8 தொடருக்கு என மைக்ரோசைட்டை அமைத்திருக்கிறது. வீடியோ மற்றும் ஸ்டில் ஆதரவுகளுக்கு என Oppo Reno 8 Pro ஆனது தனியுரிம MariSilicon X சிப் உடன் வரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Oppo Reno 8 சாதனத்தின் சிறப்பம்சங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்

சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள்

ஒப்போ நிறுவனம் முன்னதாகவே சீனாவில் ஒப்போ ரெனோ 8 மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அந்த நாட்டில் அமோக வரவேற்பு பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் அறிமுகமாகும் இந்த மாடல்களும் அதே அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாருங்கள் இந்த அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆதரவு

6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆதரவு

Oppo Reno 8 ஆனது 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 எஸ்ஓசி ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு உட்பட 80W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வேகமாக சார்ஜ் ஆதரவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 4500mAh பேட்டரி ஆதரவு இருக்கும். ப்ரோ மாடலில் இருக்கும் MariSilicon X சிப் இதில் இருக்காது.

MariSilicon X என்ற பிரத்யேக சிப்

MariSilicon X என்ற பிரத்யேக சிப்

அதேபோல் இதன் ரெனோ 8 ப்ரோ மாடலானது 6.62 இன்ச் முழு HD+ AMOLED E4 டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon 7 Gen 1 SoC உடன் வரலாம். 50 எம்பி முதன்மை கேமரா, 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவுடன் 4500mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கலாம். இதில் 80W Super Flash Charge ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தனியுரிம MariSilicon X சிப் உடன் வரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Oppo Reno 8 விலை என்னவாக இருக்கும்?

Oppo Reno 8 விலை என்னவாக இருக்கும்?

Oppo Reno 8 விலை குறித்து பார்க்கையில், இதன் அடிப்படை வேரியண்ட் ரூ.30,000 என்ற விலைப் பிரிவில் அறிமுகமாகலாம். அதேபோல் ப்ரோ வேரியண்ட் ஆனது ரூ.35,000 முதல் ரூ.40,000 விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ 7 விலை குறித்து பார்க்கையில், ரெனோ 7 ப்ரோ 5ஜி இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.39,999 எனவும் ரெனோ 7 5ஜி விலை ரூ.28,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Oppo Confirmed its Oppo Reno 8 Series Launching in India: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X