அறிமுகமானது புதிய வேரியண்ட்.. ரூ.11,999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. 5G! எந்த போன்?
கடந்த ஆண்டு லாவா போல்டு என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்1 5ஜி மாடலின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. வரும் மே 1-ம் தேதி இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வரும். அறிமுக சலுகையாக ரூ.11,999 விலையில் இந்த புதிய வேரியண்டை வாங்க முடியும். ஷாம்பெயின் கோல்டு மற்றும் ராயல் ப்ளூ நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்.

லாவா போல்டு என்1 5ஜி அம்சங்கள் (Lava Bold N1 5G Specifications): 6.75 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa core UNISOC T765 6nm) சிப்செட் உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த லாவா போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

13 எம்பி ரியர் கேமரா வசதியுடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது 4K வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
இந்த போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5000mAh பேட்டரி உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








