கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! OnePlus Q2 Pro வருது.! அவசரப்பட்டு வேற டிவி வாங்காதீங்க.! ஏன்னா?

|

பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் என்றால், பலரின் மைண்டிற்கு உடனே வரக் கூடிய ஒரு பிராண்ட் என்றால் அது ஒன்பிளஸ் (OnePlus) தான். அதனுடைய ஸ்மார்ட்போன்களுக்கென்று இந்த பிராண்ட் ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனம் ஒன்பிளஸ் டிவிகளை (OnePlus TV) அறிமுகம் செய்து இந்திய நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இப்போது அதன் டிவி சீரிஸ் வரிசையில் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி (Smart TV) மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் டிவிகள் நேர்த்தியான ஸ்லிம் வடிவமைப்புடன் கிட்டத்தட்டப் பேசல்களே இல்லாத டிஸ்பிளேவுடன் சூப்பர் டிஸைனுடன் வருகிறது. இதை மக்கள் அதிகமாக விரும்பியுள்ளனர்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! OnePlus Q2 Pro வருது.! வேற டிவி வாங்காதீங்க!

OnePlus Q2 Pro வருகிறது.. ரெடி ஆகுங்க.!

இதற்கு முன் இறுதியாக, ஒன்பிளஸ் நிறுவனம் கடைசியாக அதன் OnePlus TV 50 Y1S Pro சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது, ​​சீன நிறுவனம் அதன் பிரபலமான Q1 ப்ரோ தொடருக்கு வாரிசைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இது OnePlus Q2 Pro என்ற பெயரில் இந்தியாவிற்குள் வரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட் டிவியானது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் 65' இன்ச் 4K டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதற்கான விளக்கமான விபரங்களை இப்போது பார்க்கலாம்.

பெரிய டிஸ்பிளே தரமான வீடியோ.!

ஒன்பிளஸ் நிறுவனம், இதற்கு முன்பு அதன் ஸ்மார்ட் டிவி வரிசையில் ஒன்பிளஸ் Q1 ப்ரோ மாடலை கடந்த 2019 ஆம் ஆண்டில் பிரீமியம் வடிவமைப்புடன் அறிமுகப்படுத்தியது. இதில் மிகவும் ஸ்லிம் ஆன பேசல் பார்டர்கள் இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள சமீபத்திய தகவலின் படி, புதிதாக வரவிருக்கும் OnePlus Q2 Pro சில சுவாரஸ்யமான அம்சங்களை கொண்டுள்ளது.

இது 4K தெளிவுத்திறனுடன் கூடிய 65' இன்ச் QLED பேனல் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஸ்மூத் ஆன அனிமேஷனுக்கான உயர் 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்தைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடி மாடலான Q1 Pro ஸ்மார்ட் டிவி மாடல் 55' இன்ச் 4K பேனலைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! OnePlus Q2 Pro வருது.! வேற டிவி வாங்காதீங்க!

70W ஸ்பீக்கர் உடன் மிரட்டல் ஆடியோ.!

OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவி Google TV-யின் மேல் கட்டமைக்கப்பட்ட அதன் சொந்த தனிப்பயன் சாப்ட்வேரை கொண்டிருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. பிராண்டின் சொந்த உள்ளடக்க க்யூரேஷன் சேவையான OxygenPlay குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி 70W ஸ்பீக்கரை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

இது டால்பி அட்மோஸால் ஃபைன் டியூன் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. ஒன்பிளஸ் Q1 ப்ரோவின் அடிப்பகுதியில் காணப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட சவுண்ட்பாருடன் புதிய டிவி வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஸ்மார்ட் டிவியில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எப்போது இந்த டிவி அறிமுகமாகும்?

தற்போது, ​​டிவியின் வடிவமைப்பு மற்றும் விலை பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் முன்னோடி போன்ற நேர்த்தியான வடிவமைப்புடன் இது வரும் என்று எதிர்பார்க்கலாம். OnePlus Q2 Pro பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியை நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Q2 Pro QLED TV to Launch Soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X