புஹாஹாஹா.. வலையில் விழுந்த சீன கம்பெனி: இந்தியாவில் தயாரிக்கப் போகும் OnePlus போன்கள்

|

OnePlus நிறுவனம் OnePlus 11 ஸ்மார்ட்போனை இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த தொடரில் ஒன்பிளஸ் 11ஆர் என்ற ப்ரீமியம் ஸ்மார்ட்போன் இடம்பெற இருக்கிறது. சீன பிராண்ட் ஆன ஒன்பிளஸ் இந்தியாவில் ஒன்பிளஸ் 11ஆர் உற்பத்தியை தொடங்க இருப்பதகாவும் இந்த ஸ்மார்ட்போன் "மேக் இன் இந்தியா" பேட்ஜ் உடன் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வலையில் விழுந்த சீன கம்பெனி: இந்தியாவில் தயாரிக்கப்போகும் OnePlus போன்

OnePlus 11R

OnePlus 11R என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை நிறுவனம் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ப்ளாக்ஷிப் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாதம் இந்தியா உட்பட பிற சந்தையில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் ஒன்பிளஸ் 11 ஆர் ஸ்மார்ட்போனும் இடம்பெறும் எனவும் இது அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிமுகம்

OnePlus 11R ஸ்மார்ட்போனானது 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஏப்ரல் அல்லது மே 2023 இல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

பெயர் குறிப்பிடுவது போல் இந்த ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனானது ஒன்பிளஸ் 11 இன் கீழ் அறிமுகமாக இருக்கிறது. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் ஒரு பகுதியாக இது இடம்பெறப் போகிறது. OnePlus 11R இன் மோனிகர் ஒன்பிளஸ் இந்தியா வலைதளத்தில் காணப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

OnePlus 11R சிறப்பம்சங்கள்

OnePlus 11R சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படம் கடந்த ஆண்டு ஆன்லைனில் வெளிவந்தன. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சில அம்சங்களும் கசிந்தது.

வலையில் விழுந்த சீன கம்பெனி: இந்தியாவில் தயாரிக்கப்போகும் OnePlus போன்

லீக் ஆன சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 11 இன் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கசிந்தது. இதேபோல், OnePlus 11R இன் நேரடி படங்கள் கடந்த ஆண்டு ஆன்லைனில் வெளிவந்தன. அதன்பிறகு, ஸ்மார்ட்போன்களின் கூறப்படும் விவரக்குறிப்புகள் கசிந்தன. OnePlus 11R ஆனது CPH2487 என்ற குறியீட்டுப்பெயர் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1

OnePlus 11R ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் விகிதத்துடன் கூடிய 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2772 X 1240 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. OnePlus ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

16ஜிபி ரேம் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

சிப்செட்டை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் என்ற மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அதேபோல் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 3 ஸ்டோரேஜ் விருப்பங்கள் வெளியாகலாம்.

50 எம்பி பிரைமரி கேமரா

OnePlus 11R ஸ்மார்ட்போனில் 12 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உடன் 50 எம்பி முதன்மை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறலாம் எனவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த OnePlus ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 மூலம் இது இயங்கும் எனவும் இது கூறப்படுகிறது. ஐகானிக் அலர்ட் ஸ்லைடர், ஐஆர் பிளாஸ்டர், இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பல்வேறு ஆதரவுகள் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 11R Smartphone Might Launching Soon With Wear the Made in India Badge: Get Ready

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X