OnePlus போன்களுக்கு சோலி முடிஞ்சுச்சு.! இந்த போன் வாங்கினவங்க தலைல துண்டு தான்.!

|

ஸ்மார்ட்போன் (smartphone) தயாரிப்பு நிறுவனங்கள் வாரம் ஒரு புதிய அப்டேட் (Update), மாதம் ஒரு புதிய அறிமுகம் என்று தனது வாடிக்கையாளர்களுக்குப் புதுமையை புகுத்திக் கொண்டே இருக்கின்றன.!

இப்போதெல்லாம் வரும் ஸ்மார்ட் ஃபோன்கள் ஆண்ட்ராய்டு (android) தளத்தில் உருவாக்கப்படுவது வழக்கம். ஆண்ட்ராய்டு தளம், ஒவ்வொரு முறை தொழில்நுட்ப மேம்பாடு அடையும் பொழுதும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும் அது தொடர்பான அப்டேட்டை பெரும் வகையில் தான் அவை உருவாக்கப்படுகின்றன.

OnePlus போன்களுக்கு சோலி முடிஞ்சுச்சு.! தலைல துண்டு போட்ட பயனர்கள்.!

இந்த அப்டேட்கள், ஒரு ஸ்மார்ட்போனை தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு செயல்படுவதற்கும், வைரஸ் போன்ற தீம்பொருள்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், புதிதாக அறிமுகம் செய்யப்படும் அட்வான்ஸ்ட் (Advanced) அம்சங்களைப் பயன்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கின்றன. எனவே தான், ஒரு ஸ்மார்ட்போனை அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும் அப்டேட் என்பது மிகவும் அவசியமாகிறது.

ஆனால், எந்த ஒரு ஸ்மார்ட்போனையும் வாழ்நாள் முழுவதும் அப்டேட் செய்து கொண்டே இருக்க முடியாது. அவை ஒரு தொழில்நுட்ப கருவி என்பதால், அப்டேட் செய்வதிலும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதை, தயாரிப்பு நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. அந்த வகையில், புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் (OnePlus) தனது ஒன்பிளஸ் 7 (OnePlus 7) மற்றும் ஒன்பிளஸ் 7T (OnePlus 7T) சீரிஸின் அப்டேட்டை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகச் சொல்லாமல் சொல்லியுள்ளது.

OnePlus நிறுவனம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7T என்ற ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகம் செய்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் சீரிஸ்களும் oneplus வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியத் தொழில்நுட்ப சந்தையில் OnePlus நிறுவனம் தனது கொடியை நிலை நாட்ட இந்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7T ஸ்மார்ட் போன்கள் முக்கிய பங்கு வகித்தன.

இப்படியான, ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7T சீரிஸில் வந்த ஸ்மார்ட்போன்கள் இனிமேல் அப்டேட் செய்யப்படமாட்டாது என்று தனது இணையதளத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை ஒன்பிளஸ் நிறுவனம் வெளிப்படையாக அறிக்கை வெளியிடாமல், தனது இணையதளத்தில் ப்ரிவியஸ் அப்டேட் இன்ஃபர்மேஷன் என்ற பகுதியில் வெளியிட்டுள்ளது.

OnePlus போன்களுக்கு சோலி முடிஞ்சுச்சு.! தலைல துண்டு போட்ட பயனர்கள்.!

இந்த செயல் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் (OS Update) மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டை (Security Update) எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி மிகவும் வருத்தம் தரும் செய்தியாகவே இருந்து வருகிறது.

ஆக்சிஜன் ஓஎஸ் 12 (OxygenOS 12) அப்டேட் தான் ஒன்பிளஸ் 7 மற்றும் 7T சீரியஸில் வந்த ஸ்மார்ட் போன்கள் பெரும் கடைசி அப்டேட் ஆக இருக்குமாம். முன்னதாக ஒன்பிளஸ் 7 மற்றும் 7T சீரியஸில் வந்த ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு ஆண்டு ஆண்ட்ராய்டு அப்டேட், ஒரு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்டும் கொடுக்கப்படும் என்று ஒன்ப்ளஸ் நிறுவனம் உறுதி கூறியிருந்தது.

ஆனால், ஜூலை 2021 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் 8 சீரிஸ்-க்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன் மாடல்கள் மட்டுமே மூன்று ஆண்டு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்களை பெறத் தகுதியானவை என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 7 மற்றும் 7T சீரிஸில் வந்த ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட்கள் நிறுத்தப்படுவதாக ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது ஒருபுறம் இருந்தாலும், பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ராம் (ROM)-களை பயன்படுத்துவதன் மூலம் இனிவரும் அப்டேட்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அவற்றைச் செய்யத் தொழில்நுட்பம் தொடர்பான நுண்ணறிவு இருப்பது அவசியம்.

Best Mobiles in India

English summary
No More Updates for OnePlus 7, 7 Pro 7T, and 7T Pro smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X