Netflix-இன் புதிய அறிவிப்பு.. நவம்பர் 3 முதல் "இதுக்கு" தயார் ஆகிக்கோங்க!

|

நீங்கள் ஒரு நெட்ஃபிளிக்ஸ் (Netflix) யூசர் என்றால், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு சமீபத்திய அறிவிப்பை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்!

அதென்ன அறிவிப்பு? எதற்கு தயார் ஆக இருக்க வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நவம்பர் 3 ஆம் தேதி... 12 மணி முதல்!

நவம்பர் 3 ஆம் தேதி... 12 மணி முதல்!

அமெரிக்காவை மையமாக கொண்ட சப்ஸ்கிரிப்ஷன் ஸ்ட்ரீமிங் சர்வீஸ் மற்றும் ப்ரொடெக்ஷன் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஆனது - அதன் பெரும்பாலான வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் அது வருகிற நவம்பர் 3 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் "நடைமுறைக்கு" வரும் என்றும் அறிவித்துள்ளது!

10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?10 பைசா செலவு இல்லாமல் 'ஸ்லோ லேப்டாப்' பிரச்சனையை நீங்களே சரி செய்வது எப்படி?

பேஸிக் வித் ஆட்ஸ் (Basic with Ads)!

பேஸிக் வித் ஆட்ஸ் (Basic with Ads)!

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், அதன் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பேஸிக் வித் ஆட்ஸ் (Basic with Ads) என்று அழைக்கப்படும் இந்த புதிய திட்டம், நவம்பர் 3 ஆம் தேதி முதல் அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!

இது "விளம்பரங்களுடன் வரும்" நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் முதல் திட்டம் ஆகும். நினைவூட்டும் வண்ணம், தற்போது வரை அணுக கிடைக்கும் நெட்ஃபிளிக்ஸ் திட்டங்கள் எல்லாமே விளம்பரங்களை வழங்காத திட்டங்கள் ஆகும்!

இந்த புதிய திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்?

இந்த புதிய திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்?

இந்த புதிய Basic with Ads திட்டம் ஆனது, ஏற்கனவே அணுக கிடைக்கும் Basic திட்டத்தை போலவே 720p/HD வரையிலான வீடியோ தரத்தை வழங்கும்.

விளம்பரங்களை பொறுத்தவரை, சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 நிமிடங்கள் வரையிலான விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று நெட்ஃபிளிக்ஸ் கூறுகிறது;

மேலும் இந்த விளம்பரங்கள் 15 அல்லது 30 வினாடிகள் வரை நீளும் என்பதையும் நெட்ஃபிளிக்ஸ் குறிப்பிட்டுள்ளது!

உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?உங்கள் போனின் இன்டர்நெட் ஸ்பீட்-ஐ வெறும் 30 நொடிகளில் கண்டுபிடிப்பது எப்படி?

இன்னொரு பிரச்சனையும் உள்ளது!

இன்னொரு பிரச்சனையும் உள்ளது!

மற்ற எல்லா ஸ்ட்ரீமிங் தளங்களை போலவும், இதுவும் நாடுகள் மற்றும் பயனர்களின் விருப்பங்களை அடிப்படையாக கொண்ட விளம்பரங்களையே வழங்கும். இந்த திட்டத்தில் விளம்பரங்கள் மட்டுமே ஒரு பிரச்சனையாக இருக்காது.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் ஒரு பிளாக் போஸ்ட்டின் படி, லைசன்ஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த திட்டத்தின் (பேஸிக் வித் ஆட்ஸ்) கீழ் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் அணுக கிடைக்காது மற்றும் டைட்டில்களை டவுன்லோட் செய்யும் திறனும் இருக்காது!

இதன் விலை நிர்ணயம் என்ன?

இதன் விலை நிர்ணயம் என்ன?

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த திட்டத்தில் வேலை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் - மாதத்திற்கு $6.99 ஆகும், அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 575 ஆகும்.

இந்த புதிய திட்டமானது, விளம்பரம் இல்லாத மற்ற திட்டங்களை பாதிக்காது என்றும் நெட்ஃபிளிக்ஸ் உறுதியளித்துள்ளது. அதாவது பேஸிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் திட்டங்கள் ஆனது தொடர்ந்து அணுக கிடைக்கும் மற்றும் அவைகள் விளம்பரமில்லாத திட்டங்களாகவே இருக்கும்!

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

இந்த திட்டம் எந்தெந்த நாடுகளில் அணுக கிடைக்கும்?

இந்த திட்டம் எந்தெந்த நாடுகளில் அணுக கிடைக்கும்?

நெட்ஃபிளிக்ஸின் இந்த புதிய "பேசிக் வித் ஆட்ஸ்" திட்டமானது, தற்போது வரையிலாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா? விரைவில் அறிமுகமாகும் பட்சத்தில் அது எப்போது நடக்கும்? என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை!

Best Mobiles in India

English summary
Netflix Introduces New Plan Under Rs 600 with ad support Which Available From November 3rd

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X