இது ஆரம்பம் தான்., பிரபஞ்சத்தின் ரகசியமும் துல்லியமும்: களமிறங்கிய NASA james Webb தொலைநோக்கி!

|

NASA, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் SMACS 0723 என்ற கேலக்ஸி கிளஸ்டரை காண்பிக்கிறது. இந்த தொலைநோக்கியில் எந்தளவு துல்லியத் தன்மை கிடைக்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்களோ அந்த அளவிற்கு பிரமிக்க வைக்கும் வகையில் இந்த புகைப்படம் இருக்கிறது. இந்த புகைப்படத்தின் தன்மை மற்றும் விவரத்தை பார்க்கலாம்.

துல்லியமான முதல் முழு வண்ண புகைப்படம்

துல்லியமான முதல் முழு வண்ண புகைப்படம்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட துல்லியமான முதல் முழு வண்ண புகைப்படத்தை நாசா வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் நாசா நிர்வாகி பில் நெல்சன் ஆகியோர் வாசிங்டன் டிசியில் உள்ள வெள்ளை மாளிகையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் புகைப்படத்தை வெளியிட்டனர். 13 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் நடைபெறும் நிகழ்வு இந்த தொலைநோக்கி மூலம் துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் துல்லியமான புகைப்படம்

பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் துல்லியமான புகைப்படம்

நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இதுவாகும். இதுநாள் வரை எடுக்கப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் துல்லியமான அகச்சிவப்பு புகைப்படங்களில் மிக சிறந்தது இதுதான் என கூறப்படுகிறது. வெப்ஸ் ஃபர்ஸ்ட் டீப் ஃபீல்ட் என்று அழைக்கப்படும் இந்த விண்மீன் கிளஸ்டர் SMACS 0723 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் பல்வேறு விவரங்கள் தெரிய வந்துள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

SMACS 0723 கேலக்ஸி கிளஸ்டர் காட்சி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆனது பல பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கிறது. அதன்படி இந்த தொலைநோக்கியில் உள்ள Webb's Near-Infrared Camera (NIRCam) மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக NASA குறிப்பிட்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் முதலாவதாக SMACS 0723 கேலக்ஸி கிளஸ்டர் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட புகைப்படம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட புகைப்படம்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. தொலைநோக்கி அங்கிருந்து தான் பிரபஞ்சத்தின் புகைப்படத்தை பதிவு செய்து பூமிக்கு அனுப்புகிறது. அதன்படி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முதல் வண்ண புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

தொலைதூர பொருட்களும் புகைப்படத்தில் துல்லியமாக

தொலைதூர பொருட்களும் புகைப்படத்தில் துல்லியமாக

இந்த தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தொலைதூரத்தில் உள்ள விண்மீன் திரள்கள் கூட பெரிதாகவும் தெளிவாகவும் தெரிகிறது. ஜேம்ஸ் வெப்பின் NIRCam மூலம் இந்த கூர்மையான காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிகச் சிறந்த ரெசல்யூஷன் உடனான புகைப்படம்

மிகச் சிறந்த ரெசல்யூஷன் உடனான புகைப்படம்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் பிரபஞ்சத்தின் தொலை தூரங்களில் உள்ள பொருட்களை கூட இதுவரை காண முடியாத அளவிற்கு துல்லியமாக காட்சிப்படுத்த முடியும் எனவும் மிகச் சிறந்த ரெசல்யூஷன் உடன் எடுக்கப்பட்ட முதல் படம் இதுவே எனவும் நாசா தெரிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை தொலைநோக்கி பதிவு செய்வதற்கு ஒரு நாளானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 மடங்கு சக்தி வாய்ந்த தொலைநோக்கி

100 மடங்கு சக்தி வாய்ந்த தொலைநோக்கி

பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. குறிப்பாக இந்த தொலைநோக்கி, முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டதாகும்.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு காரணம்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு காரணம்

விண்வெளி தொடர்பான ஆய்வுகளுக்காக, 1990ல் நாசா அனுப்பிய 'ஹப்பிள்' என பெயரிடப்பட்ட தொலைநோக்கியில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கக் கண்ணாடிகளுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

தங்கக் கண்ணாடிகளுடன் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது. அதன் அகலம் 21.32 அடி ஆகும். பெரிலியத்தால் செய்யப்பட்ட 18 அறுகோண துண்டுகளை இணைத்து இந்த கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துண்டிலும் 48.2 கிராம் தங்க முலாம் பூசப்பட்டு பிரதிபலிப்பானாக இந்த தொலைநோக்கி செயல்படுகிறது. குறிப்பாக உலகம் தோன்றியது எப்படி என்று கூட இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Shows First James Webb Space Telescope Image: SMACS 0723 Galaxy Cluster

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X