நாசா இயக்கிய அப்பல்லோ: நிலவில் மனிதன் தடம் பதித்ததன் விளைவு மற்றும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

|

அப்பல்லோ 11 விண்கலமானது விண்ணுக்கு மனிதர்களை அனுப்பி 50 ஆண்டுகள் எட்டுகிறது. இந்த விண்கலமானது ஜூலை 16, 1969-ல் பூமிக்கு திரும்பயது. இந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் கொலின்ஸ், எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூவரும் சென்றனர்.

ஈகிள் என்று பெயர் கொண்ட சந்திரக்கூறு

ஈகிள் என்று பெயர் கொண்ட சந்திரக்கூறு

அப்பல்லோ 11 விண்கல பயணத்தின் போது சந்திரனுக்கு மறுபுறத்தில் ஈகிள் என்று பெயர் கொண்ட சந்திரக்கூறு கொலம்பியா-வில் இருந்து பிரிந்து சென்றது. இதில் கொலின்ஸ் கொலம்பியாவிலேயே கன்ட்ரோல் தேவைக்காக இருந்து விட்டார். பிரிந்து சென்ற ஈகிள்-ல் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், அல்ட்ரினும் சென்றனர்.

உலகம் வியந்து பார்த்த தருணம்

உலகம் வியந்து பார்த்த தருணம்

சரியாக ஈகிள் நிலவின் தரையிறங்கி அரைமணி நேரத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், களத்தில் தடம் பதித்து அந்த தகவலை பூமிக்கு அனுப்பினார். உலக வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய தருணம் அது. சரியாக 21 மணி நேரம் 36 நிமிடங்களுக்கு பின்னர், ஈகிள் இயந்திரத்தை இயக்கி மீண்டும் கொலம்பியாவுடன் இணைத்து ஜூலை 24-ம் தேதி பூமிக்கு திரும்பியது.

ஈன் சாலமன் கூறும் கருத்துகள்

ஈன் சாலமன் கூறும் கருத்துகள்

இந்த நிலையில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லாமண்ட்-டோஹெர்டி எர்த் ஆய்வகத்தின் இயக்குநராக பணியாற்றி வரும் ஈன் சாலமன், சூரிய மண்டலத்தின் உள் கிரகங்கள் குறித்தும் நிலவின் மனிதன் கால் பதித்த பிறகு உலகம் அடைந்த மாற்றங்கள் குறித்தும் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கலாம்.

யார் இந்த ஈன் சாலமன்

யார் இந்த ஈன் சாலமன்

ஈன் சாலமன், சமீபத்திய ஆராய்ச்சிகளில் பெரும்பாலானவை சூரிய மண்டலத்தின் உள் கிரகங்களின் புவியியல் மற்றும் புவி இயற்பியலில் கவனம் செலுத்தி வருவதாக உள்ளன. மேலும் இவர் நாசாவின் மெசெஞ்சர் பணியின் முதன்மை ஆய்வாளராக இருந்தவர், இந்த குழுவானது புதனை ஆராய்வதற்கான விண்கலத்தை அனுப்பியது அதோடு கிரகத்தின் கலவை, புவியியல், நிலப்பரப்பு, ஈர்ப்பு மற்றும் காந்தப்புலங்கள், எக்ஸ்போஸ்பியர், காந்த மண்டலம் மற்றும் ஹீலியோஸ்பெரிக் சூழல் ஆகிய அனைத்து குறித்தும் ஆய்வு செய்திருக்கிறது. சாலமனின் இந்த கருத்தை அப்பல்லோ 11, 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியம் மற்றும் தேசிய ஆவணக்காப்பகம் இணைந்து வழங்கியது.

அப்பல்லோ 11 நிலவின் முதல் மனிதனை தரையிறக்கிய போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்தில் இருந்தீர்கள்?

அப்பல்லோ 11 நிலவின் முதல் மனிதனை தரையிறக்கிய போது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்தில் இருந்தீர்கள்?

அப்பல்லோ 11 பணிக்கு முன்னதாகவே நான் நிலவின் உட்கட்டமைப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். நிலவில் மனிதன் கால் தடத்தை பதித்த போது நான் எம்ஐடியில் நில அதிர்வு அறிவியல் குறித்த ஆய்வறிக்கை செய்து கொண்டிருந்தேன். அப்பல்லோ 11 தரையிறங்குவதற்கு முன்னதாக எம்ஐடி ஆசிரியர்களும் மாணவர்களும் சந்திரனைப் பற்றி விவாதங்களை நடத்தினார்கள், அப்போதே அப்பல்லோ பயணத்தின் தாக்கம் குறித்து சிந்திக்க ஆரம்பித்தோம். அந்த நிகழ்வை குறித்து யோசித்துக் கொண்டே இருந்தோம்.

போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!போலி., போலி., போலி: பேஸ்புக் நிறுவனம் அதிரடி., இதை பேஸ்புக் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குங்கள்!

 நிலவின் மனிதன் கால்தடம் பதித்தது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது?

நிலவின் மனிதன் கால்தடம் பதித்தது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது?

அப்பல்லோ தரையிரக்கத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதர்கள் மற்றொரு கிரகத்தின் மேல் தன் தடத்தை பதிப்பது என்பது வரலாற்று நிகழ்வு என்பதை நான் உணர்ந்தேன்.
இந்த நிகழ்வு என்னை மட்டும் அல்ல எல்லோரையும் கவரும் விதமாக இருந்தது. நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்ததை உலக உள்ள பில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தன என்று நினைக்கிறேன்.

நீங்கள் மேற்கொண்டுள்ள கிரக அறிவியல் ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்திலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

நீங்கள் மேற்கொண்டுள்ள கிரக அறிவியல் ஒட்டுமொத்த அறிவியல் சமூகத்திலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

அப்பல்லோ நிலவில் மனிதர் தடம் பதித்த 1969 ஆம் ஆண்டில் உண்மையில் கிரக அறிவியல் துறை என எந்த துறையும் இல்லை. அப்பல்லோ 11-க்குள் நாசா வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பியிருந்தது. அப்பல்லோ திட்டத்திலிருந்து விஞ்ஞான ரீதியிலான வருவாய் பெற்றவர்கள் அனைவருமே அறிவியல், வேதியல் மற்றும் இயற்பியல் துறையில் இருந்து வந்தவர்கள் தான். நாசாவின் அடுத்தடுத்த முதலீடுகள் ஏராளமான விஞ்ஞான நிபுணர்களை கொண்டு வந்தது. நிலவில் மனிதர்கள் அற்புதத்தை ஏற்படுத்த நாடு முழுவதும் புதிய கருவிகள் மற்றும் ஆய்வகங்களுக்கு நிதி அளித்தன.

செவ்வாய், வீனஸ், புதன், வியாழன் மற்றும் சனி

செவ்வாய், வீனஸ், புதன், வியாழன் மற்றும் சனி

சூரிய மண்டலத்தின் பிற பகுதிகளை ஆராய ரோபோ பயணிகளை மேற்கொள்ளும் வகையில் அப்பல்லோ திட்டத்தின் செயலானது இருந்தது. அப்பல்லோ 11 இன் சில ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய், வீனஸ், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகத்துக்கு விண்கலத்தை ஏவினோம். இந்த செயல்களானது விண்வெளியில் மனிதர்களின் மகத்தான விரிவாக்கமாகும். இதையடுத்து சூரியனின் எஞ்சிய பகுதியை எவ்வாறு ஆராயலாம் என்பதிலேயே அடுத்தக்கட்ட செயல் இருக்கும்.

அப்பல்லோ 11 உடன் லாமண்டின் ஈடுபாட்டைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

அப்பல்லோ 11 உடன் லாமண்டின் ஈடுபாட்டைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

லாமண்டின் கேரி லாதம், நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகளை ஆராய்ச்சிக்காக வாங்குவதில் முதல் வரிசையில் லாமண்ட் விஞ்ஞானிகள் இருந்தனர். அதேபோல் லாமண்ட் சந்திரனின் புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ஒரு தலைவராக இருந்தவர். அப்பல்லோ பயணங்களிந் போது பல புவி சார் இயற்பியல் சோதனை இருந்தது. ஆனால் அவை அனைத்தையும் செயல்முறை சோதனை படுத்தியது நில அதிர்வு குழுவான லாமண்ட் குழு தான். அடுத்தக்கால கட்ட அப்பல்லோ பயணங்களில், விண்வெளி வீரர்கள் சந்திர உட்புறத்திலிருந்து வெளியேறும் வெப்பத்தை அளவிட்டனர். அப்பல்லோ ஹீட் ஃப்ளோ பரிசோதனைக்கு மார்கஸ் லாங்செத் என்ற லாமண்ட் விஞ்ஞானி தலைமை தாங்கினார்.

சந்திரனைப் பற்றி கற்றுக்கொள்வது என்பது நமக்கு ஏன் மிகவும் முக்கியமானது?

சந்திரனைப் பற்றி கற்றுக்கொள்வது என்பது நமக்கு ஏன் மிகவும் முக்கியமானது?

மனிதர்களை சந்திரனில் தரையிறக்குவதும் பாதுகாப்பாக திரும்பக் கொண்டுவருவதும் ஒரு வல்லமைமிக்க தொழில்நுட்ப சவாலாக இருந்தது. அது நிறைவேற்றப்பட்ட நேரமும் நம்பமுடியாத அளவிற்கு குறுகியதாக இருந்தது. முதல் மனித விண்வெளிப் பயணம் 1961 இல் இருந்தது. எட்டு ஆண்டுகளுக்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பி அவர்களை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பதைக் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், நாங்கள் உண்மையில் அதை செய்தோம். மனித வரலாற்றில் ஒரு நபர் மற்றொரு கிரகத்தில் கால் வைத்தது அதுவே முதல் முறை. இது மீண்டும் ஒருபோதும் நடக்காத ஒன்று.

ஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எவ்ளோ நாட்கள் நீடிக்கும்?ஜியோ நிறுவனத்தின் 6பைசா கட்டணம்: இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? எவ்ளோ நாட்கள் நீடிக்கும்?

மனிதர்களை இவ்வளவு விரைவாக சந்திரனுக்கு அனுப்பியது என்பது எப்படி சாத்தியமாகியது என்று நினைக்கிறீர்கள்?

மனிதர்களை இவ்வளவு விரைவாக சந்திரனுக்கு அனுப்பியது என்பது எப்படி சாத்தியமாகியது என்று நினைக்கிறீர்கள்?

கென்னடி நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு விஞ்ஞானிகள் பெரிய தியாகம் செய்துள்ளார்கள். 1960 களின் பெரும்பகுதி முழுவதும் ஜனநாயகக் கட்சித் தலைவர்களான கென்னடி மற்றும் ஜான்சன் ஆகியோரிடம் இருந்தன. அவர்கள் நிலவின் மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர். எனவே இது 8 ஆண்டுகளில் சாத்தியானது. அதுமட்டுமின்றி அதற்கேற்ப நிதியும் இருந்தது. முதல் விண்வெளி வீரர்கள் சோதனையில் விமானிகளே இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வேலையின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டனர்.

அப்பல்லோ 11 காலத்திலிருந்து இன்று வரை சந்திர பயணங்கள் எவ்வாறு மாறிவிட்டன?

அப்பல்லோ 11 காலத்திலிருந்து இன்று வரை சந்திர பயணங்கள் எவ்வாறு மாறிவிட்டன?

அப்பல்லோ 18, அப்பல்லோ 19, மற்றும் அப்பல்லோ 20 ஆகியவை இருந்திருக்க வேண்டும், ஆனால் இவை விலையுயர்ந்த பணிகளாகவே கருதப்பட்டது. அதுமட்டுமின்றி 1972 ஆம் ஆண்டில் யு.எஸ் வியட்நாமில் போருக்கு எதிராக நிறைய பணம் செலவழித்தது. அந்த பயணங்களில் பறக்கும் விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், அந்த பணிகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் அப்பல்லோ திட்டம் முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமைந்தது.

Source: columbia.edu

Best Mobiles in India

English summary
How Landing on the Moon Changed Our World

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X