சைலண்டா வேலைய பார்த்த சீனா: எவரெஸ்ட் உச்சியில் 5G டவர்- இன்னோனு இருக்கு!

|

எவரெஸ்ட் சிகரத்தில் 5 ஜி டவர்கள் சீனா நிறுவியுள்ளது. இதன்மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது

200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரிப்பு

வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரிப்பு

அதேபோல் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் படிப்படியாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பதே கணிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.

Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!Jiolink plans: தினசரி 5 ஜிபி டேட்டா, 196 நாட்கள் வேலிடிட்டி., இதோ அட்டகாச திட்டம்!

உலகில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா கோரத்தாண்டவம்

உலகில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா கோரத்தாண்டவம்

உலகில் பல்வேறு நாடுகளிலும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த நோயில் இருந்த 6 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் சுமார் 16 லட்சத்து 70 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 57 ஆயிரம் பேர் வரை இறந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் அமெரிக்காவில் அதிகப்பட்சம்

உலக அளவில் அமெரிக்காவில் அதிகப்பட்சம்

இதில் உலக அளவில் அமெரிக்காவில் அதிகப்பட்சமாக 7 லட்சத்து 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்பெயினில் 2 லட்சம் பேரும், இத்தாலியில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர், பிரான்சில்லில் 1 லட்சத்து 55 பேருக்கும் தொற்று உறுதி ஆகியுள்ளது.

வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான்

வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான்

இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலிகாயுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் தான் என வதந்தி பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம் என்ற வதந்தியை மக்கள் நம்பவும் தொடங்கியுள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர்

20-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர்

இதையடுத்து இங்கிலாந்து மக்கள் லிவர்பூர், வெஸ்ட் மிட்லேண்ட் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பொறியாளர்கள், ஊழியர்களை பொதுமக்கள் தாக்கத் தொடங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனா எவரெஸ்ட் மலையில் 5ஜி டவரை நிறுவியதோடு அதை லைவ் செய்தும் காண்பித்துள்ளது.

அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு

அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு

எவரெஸ்ட் சிகரத்தில் 5300 அடி, 5800 அடி மற்றும் 6500 அடியில் உயரத்தில் சீனா 5ஜி டவர்களை நிறுவியுள்ளது. இதன்மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. மேலும் இந்த டவர்களை அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எவெரெஸ்ட் சிகரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Airtel மலிவான விலையில் 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!Airtel மலிவான விலையில் 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டங்கள்!

24 மணிநேரமும் படம் பிடிக்கப்பட்டு வருகிறது

எவரெஸ்ட் சிகரத்தின் தோற்றம் 24 மணிநேரமும் படம் பிடிக்கப்பட்டு வருதாக சீனா டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு கொரோனாவால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு இந்த காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source: gsmarena.com

Best Mobiles in India

English summary
Mount Everest now has 5G coverage courtesy of china

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X