Home
Mobile

புது VIVO 5ஜி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா, 12GB ரேம், IP69 ரேட்டிங்.. என்ன விலை?

விவோ (Vivo) நிறுவனமானது 200எம்பி ப்ரைமரி கேமரா, 7000mAh பேட்டரி மற்றும் மீடியாடெக் டிமென்சிட்டி 7360 டர்போ சிப்செட் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்ட விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போனில் உலகளவில் அறிமுகம் செய்துள்ளது

விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 10-பிட் பேனல் HDR10+ பிளேபேக்கை ஆதரிக்கிறது மற்றும் 1900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை வழங்கும். இன்-டிஸ்பிளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் டிஸ்பிளேவல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

புது VIVO 5ஜி போன் அறிமுகம்.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா, 12GB ரேம்!

கேமராக்களை பொறுத்தவரை இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் உடனான எப்/1.88 அபெர்க்ஷர் உடனான 200எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. விவோ இந்த ஸ்மார்ட்போனில் அதன் ஆரா லைட் ரிங் பிளாஷையும் (Aura Light ring flash) சேர்த்துள்ளது. இது போர்ட்ரெய்ட் லைட்டிங்கை மேம்படுத்த பயன்படுத்துகிறது.

பேட்டரியை பொறுத்தவரை விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 90W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. முந்தைய விவோ வி60இ ஸ்மார்ட்போனில் உள்ள அதே சார்ஜிங் ஸ்பீட் தான்; ஆனால் அந்த மாடலில் சற்றே சிறிய 6500mAh பேட்டரி தான். அதே நேரத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) மாடல்கள் கூட 6,500mAh செல்களை தான் கொண்டுள்ளன.

விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்களையும் கொண்டுள்ளது. கனெக்ட்விட்டி ஆப்ஷன்களில் இது டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு மற்றும் ஐஆர் பிளாஸ்டர் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின்ஓஎஸ் 6 உடன் வருகிறது.

விவோ வி70 எப்இ விலை: இந்தோனேசியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 8GB + 256GB ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.35,000 க்கும், 12GB + 256GB ஆப்ஷன் சுமார் ரூ.39,000 க்கும் மற்றும் 8GB + 512GB ஆப்ஷன் தோராயமாக ரூ.40,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மியூஸ் பர்பிள், ஓஷன் ப்ளூ மற்றும் டைட்டானியம் சில்வர் ஆகிய 3 கலர்களில் வெளியாகியுள்ளது.

Opinion: இப்போதைக்கு இந்திய அறிமுகம் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் பெரும்பாலும் இது இந்தியாவிலும் அறிமுகமாகும். ஏனென்றால் மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த போன் விவோவின் வி70 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், விவோ வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் கீழ் பேஸிக் மாடலின் விலை ரூ.45,999 முதல் தொடங்கி எலைட் மாடலின் விலை ரூ.61,999 வரை செல்கிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி நோட் 15 ப்ரோ சீரீஸ் (Redmi Note 15 Pro Series) மற்றும் ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series) ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V70 FE With 7000mAh Battery 200MP Primary Camera Launched See Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X