எங்களை நிம்மதியா வாழவிடுங்கடா.. சோதிக்காதீங்க.! இப்படி ஒரு AI ரோபோட்டை கேட்டோமா நாங்க?

|

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொழில்நுட்பம் உலகளவில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஏ.ஐ (AI) என்று அழைக்கப்படும் - இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபாட்கள் (Robots) இப்பொழுது பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மிகவும் சாமர்த்தியமாகவும், வேகமாகவும் இந்த AI ரோபாட்கள் செய்து முடித்துவிடுகின்றன.

அந்த வரிசையில், இதுவரை நாம் பல வினோதமான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்களை (Artificial Intelligence Robots) பார்த்திருக்கிறோம். ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபாட்டை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் உருவாக்கியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்டை வால்-இ (Vall-E) என்று அழைக்கிறது.

எங்களை நிம்மதியா வாழவிடுங்கடா.. சோதிக்காதீங்க.! இதை நாங்க கேட்டோமா?

இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபாட் "வால்-இ" உங்கள் குரலைக் கேட்டதும், வெறும் மூன்று வினாடிகளில் அப்படியே அச்சு அசலாக உங்களைப் போலவே பேசுமாம். சத்தத்திலும் சரி, உச்சரிப்பிலும் சரி, இது அப்படியே உங்களைப் போலவே அச்சு அசல் வார்த்தைகளாலும், குரலிலும் உங்களைப் போலவே பேசுகிறது என்பது ஆச்சரியம்.!

கேட்பதற்கே மிகவும் வினோதமாக இருக்கிறது அல்லவா? இதுவரை நாம் பல பிரமுகர்களின் குரல்களை மிமிக்ரி ஆர்டிஸ்ட்கள் மிமிக்ரி (mimicry) செய்து தான் கேள்விப்பட்டிருக்கிறோம்; முதல் முறையாக ஒரு ஏஐ ரோபோட் (AI Robot) - நீங்கள் யார் என்று தெரியாத போதிலும், உங்களுடைய குரலை வெறும் மூன்றே - மூன்று வினாடிகள் மட்டும் கேட்டு அப்படியே அச்சு அசல் உங்கள் குரலிலேயே பேசுவது வியப்பின் உச்சம்.

இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோட்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 60 ஆயிரம் மணி நேரம் பயிற்சிக்கு உள்ளடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோபோட் ஆங்கிலத்தில் (English) மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டதனால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, இது உங்கள் குரலை எடுத்துக்கொண்டு அப்படியே ஆங்கிலத்தில் பேசுகிறது என்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

குறிப்பாக அந்த நபரின் உச்சரிப்பையும், அந்த நபர் பேசும் பேச்சில் உள்ள உணர்ச்சிகளையும் இது அப்படியே பிரதிபலிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த ரோபோட் உச்சரிப்பது அப்படியே அசல் மனிதன் போல இருந்தாலும், சில நேரங்களில் இது ஒரு இயந்திர மனிதன் போல பேசுகிறது என்பதை அதனுடைய குரல் காண்பித்துவிடுகிறது.

எங்களை நிம்மதியா வாழவிடுங்கடா.. சோதிக்காதீங்க.! இதை நாங்க கேட்டோமா?

இந்த குறைபாடுகளை நீக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்னும் சில செயல்பாடுகளை மேம்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஒரு புறம் இது ஒரு புதிய கண்டுபிடிப்பு என்றாலும் - இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கருத்துக்கள் வெளியாகி உள்ளது. காரணம், ஏற்கனவே உலக அளவில் சைபர் தாக்குதல்களும் (cyber crime), டிஜிட்டல் மோசடிகளும் (digital crimes) பெருகிவிட்ட நிலையில் ஒரு நபரின் குரலை மட்டும் மூன்று வினாடிகள் கேட்டு, அந்த நபரைப் போல் பேசுவதனால் மோசடிக்காரர்களிடம் இத்தகைய ரோபோட் பயன்பாட்டிற்குக் கிடைத்தால் மக்கள் நிலை என்னாகும்?

உலக அளவில் சில வங்கிகளில் வாய்ஸ் வெரிஃபிகேஷன் (voice verification) போன்ற அம்சங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மனித குரல்களுக்கு இருக்கும் தனி அடையாளத்தை இந்த ஏஐ ரோபாட் அப்படியே பிரதிபலிப்பதனால் இது ஆபத்தில் முடியக் கூட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் இனி உங்களுக்குத் தெரிந்த நபர் போல இந்த அம்சத்தைக் கொண்டு, உங்களைத் தொடர்பு கொண்டால் நீங்களும் ஏமாற்றப்படுவீர்கள் தானே.

இனி உங்களிடம் யார் பேசுவது பேசியது? பேசியது மனிதன் (human) தானா? அல்லது இது ஒரு ரோபோட்டா (Robot)? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதுவங்கிவிடும். இது அன்றாட வாழ்க்கை இருக்கும் மனிதர்களுக்கு நிம்மதியைக் குலைத்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இதைப் பல நெறிமுறைகளை மேற்கொண்ட பிறகு, இதைப் பாதுகாப்புடன் அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய ரோபோட்டை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Microsoft VALL-E AI Robot Can Replicate Any Human Voice In Just Three Seconds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X