இனி நம்ம காலம்., அடிதூள்:சீனா வேணாம் இந்தியாக்கே வரோம்-முதலில் Apple,இப்போ Lava ரூ.800 கோடி முதலீடு

|

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றம் செய்ய லாவா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 800 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் உலகளவில் விளைவு

கொரோனா தாக்கம் உலகளவில் விளைவு

கொரோனா தாக்கம் உலகளவில் விளைவை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு

கொரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு

அதேபோல் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. ஏணைய தொழில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பரிசோதனைகள் அதிகரிக்க நோயப் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?அட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா?

இந்தியாவில் மொத்தம்  85,940  பேர்

இந்தியாவில் மொத்தம் 85,940 பேர்

இந்தியாவில் மொத்தம் 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளாகவும் அதேபோல் இதுவரை 30153 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அரசு பல்வேறு நடவடிக்கை

அரசு பல்வேறு நடவடிக்கை

தமிழத்தில் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,000-த்தை கடந்துள்ளது. இதில் 2000-த்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த செய்தி ஆறுதல் தரும்விதமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

உலகம் முழுவதும் 41 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 84 ஆயிரத்துத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதேபோல் தற்போதைய நிலைப்படி ரஷ்யாவில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது.

பிரதான ஒன்று ஊரடங்கு நடவடிக்கை

பிரதான ஒன்று ஊரடங்கு நடவடிக்கை

கொரோனா வைரஸை தடுக்கு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் பிரதான ஒன்று ஊரடங்கு நடவடிக்கை. இந்த ஊரடங்கில் பல நிறுவனங்களின் உற்பத்தி விகிதமும் விற்பனையும் முடங்கி கிடக்கிறது. இதில் உலகில் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கி வைத்துள்ள பல்வேறு நிறுவனங்களும் விதிவிலக்கு அல்ல.

ஸ்மார்ட்போன்கள் சீனாவில் உருவாக்கம்

ஸ்மார்ட்போன்கள் சீனாவில் உருவாக்கம்

இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்த பரவத் தொடங்கியது என்பதால் பல்வேறு நிறுவனங்களும் சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இதையடுத்து உற்பத்தியை வேறு நாட்டில் மேற்கொள்ள நிறுவனங்கள் திட்டமிடுகிறது அந்நாடு இந்தியாதான்.

மூன்று திட்டங்களை அறிவித்த இந்திய அரசு

மூன்று திட்டங்களை அறிவித்த இந்திய அரசு

இந்தியா நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில், உள்ளூர் மின்னணு உற்பத்தியை அதிகரிக்கவும், 2025 க்குள் 20 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கவும் சுமார் 48,000 கோடி ரூபாய் மொத்த ஊக்கத்தொகை உள்ளடக்கிய மூன்று திட்டங்களை இந்திய அரசு அறிவித்தது.

இந்திய கைப்பேசி நிறுவனமான லாவா

இந்திய கைப்பேசி நிறுவனமான லாவா

இந்தியாவின் இந்த அறிவிப்பு இந்திய கைப்பேசி நிறுவனமான லாவா-வின் செயல்பாடுகளை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு நகர்த்துவதற்கு திட்டங்களை உருவாக்க உதவும் வகையாக உள்ளது.

இந்தியாவிலிருந்து தொடர முடிவு

இந்தியாவிலிருந்து தொடர முடிவு

இதுகுறித்த லாவா இன்டர்நேஷனலின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹரி ஓம் ராய், சுமார் 600 முதல் 650 ஊழியர்களைக் கொண்ட தனது தயாரிப்பு வடிவமைப்பு குழுவை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். தென்ழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ போன்ற பிற சந்தைகளுக்கு சீனாவிலிருந்து கைப்பேசிகளை ஏற்றுமதி செய்யும் வேலையை இந்தியாவிலிருந்து தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 800 கோடி முதலீடு

ரூ. 800 கோடி முதலீடு

இந்தியாவில் கைப்பேசிகளின் வளர்ச்சி, உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 800 கோடி முதலீடு செய்ய லாவா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உருவாக்கத் திட்டம் ஆப்பிள் நிறுவனமும் தற்போது சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐந்தில் ஒரு பகுதியை சீனாவில் தான் உற்பத்தி செய்து வந்தது. இதுகுறித்து ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் இந்தியா அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?

இந்தியாவில் முதல் ஷோரூம்

இந்தியாவில் முதல் ஷோரூம்

ஆப்பிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்களின் மூலம் இந்தியாவில் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இந்தியாவில் தற்போதுவரை ஷோரூம்கள் இல்லை என்ற நிலையில் இந்த உற்பத்தி மையம் ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவில் முதல் ஷோரூம் ஆரம்பிக்கப்படும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

source: economictimes.com

Best Mobiles in India

English summary
lava plan to invest in india Rs 800 crore over the next five years

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X