செல்பி கேமரா பிரிவில் ஒரு புரட்சி: மேம்பட்ட கேமராவுடன் வரும் ஐபோன் 14- எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் தகவல்!

|

என்னதான் விலை உயர்ந்த ப்ரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் ஐபோன் என்றால் தனி மோகம் இருக்க தான் செய்யும். காரணம் அதன் தனித்துவ வடிவமைப்பும் அம்சங்களும் தான். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு சாதனங்களின் 108 எம்பி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படமானது ஐபோனின் 12 எம்பி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படத்துக்கு ஈடாகாது.

கூடுதல் மேம்பாட்டு அம்சங்களுடன் செல்பி கேமரா

கூடுதல் மேம்பாட்டு அம்சங்களுடன் செல்பி கேமரா

அதன்படி வரவிருக்கும் ஐபோன் 14 சாதனத்தின் செல்பி கேமராவானது கூடுதல் மேம்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனத்தின் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் அம்சம் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் உயர்தர படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம். ஐபோன் 14 குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் அந்த சாதனத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

ஆட்டோஃபோகஸ் அம்சத்துடன் ஐபோன் 14

ஆட்டோஃபோகஸ் அம்சத்துடன் ஐபோன் 14

முன்னதாக வெளியான அனைத்து ஐபோன் சாதனங்களிலும் நிலையான ஃபோகஸ் கேமரா மட்டும் இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது ஐபோன் 14 சாதனத்தில் ஆட்டோ ஃபோகஸ் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. கேமராவில் பிக்சல் என்பது எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் அதன் சென்சார்.

அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!

மெகாபிக்சல் என்றால் என்ன?

மெகாபிக்சல் என்றால் என்ன?

கேமராவில் உள்ள ஒரு மெகாபிக்சல் என்பது 10 லட்சம் பிக்சல்களை உள்ளடக்கியது. புகைப்படத்தை ஆழமாக ஜூம் செய்யும் போது காட்சி மங்களாகி கட்டம் கட்டமாக தோன்றும் அந்த ஒவ்வொரு கட்டமும் ஒரு பிக்சல் ஆகும். அதன்படி நீங்கள் 10 மெகாபிக்சல் கேமராவில் புகைப்படம் எடுத்தால் அதில் 1 கோடி பிக்சல்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி என்றால் 108 மெகாபிக்சல் கேமரா தானே சிறந்தது அதில் தானே 10 கோடி பிக்சல்கள் வரை இருக்கும் என்ற கேள்வி வரலாம். அதுதான் இல்லை.

கேமராவில் சென்சார் மிக அவசியம்

கேமராவில் சென்சார் மிக அவசியம்

கேமராவை பொறுத்தவரை எத்தனை மெகாபிக்சல் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதன் சென்சார்கள். காரணம் அனைத்து பிக்சல்களையும் ஒருங்கிணைத்து துல்லிய காட்சியாக வழங்குவது சென்சார் தான். ஐபோனில் பெரிய அளவிலான சென்சார் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே ஐபோனின் 12 எம்பி கேமராவானது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களின் கேமராவை விட சிறந்ததாக இருக்கிறது. இதுவரை வெளியான ஐபோனின் கேமராக்களே சிறந்ததாக இருக்கும் நிலையில் தற்போது இன்னும் மேம்பட்ட கேமரா ஆதரவுடன் ஐபோன் 14 வருகிறது என்றால், அது எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

17 வருட பயணம்: யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ என்ன தெரியுமா?17 வருட பயணம்: யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட முதல் வீடியோ என்ன தெரியுமா?

அனைவரின் கவனமும் ஆப்பிள் அறிமுக நிகழ்வை நோக்கி

அனைவரின் கவனமும் ஆப்பிள் அறிமுக நிகழ்வை நோக்கி

செப்டம்பர் மாதம் நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக நிகழ்வை நோக்கியே அனைவரின் எதிர்பார்ப்பும் இருக்கிறது. காரணம் இந்த நிகழ்வில்தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபோன் 14 சாதனத்தில் மேம்பட்ட கேமரா இடம்பெறும் என்ற தகவல் அனைவரின் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது. மேம்பட்ட கேமரா என்றால் எதை குறிக்கிறது எப்படி இருக்கும் என்றுதானே சிந்திக்கிறீர்கள். வாருங்கள் அதையும் விரிவாக பார்க்கலாம்.

மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!

பிரபல ஆப்பிள் ஆய்வாளர் கூறிய தகவல்

பிரபல ஆப்பிள் ஆய்வாளர் கூறிய தகவல்

ஐபோன் 14 கேமரா குறித்த தகவலை பிரபல ஆப்பிள் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் சாதனத்தின் முன்பக்க கேமராவிற்கு என எல்ஜி இன்னோடெக் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதையடுத்து ஐபோன் 14 முன்புற கேமராவின் மேம்பாடு என்பது இதுவரை கண்டிறாத வகையில் இருக்கும். இந்த சாதனத்தின் முன்பக்க கேமராவானது ஆட்டோஃபோகஸ் தன்மையை ஆதரிக்கும் என கூறினார்.

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு- ஐபோனுக்கு போட்டியாக களமிறங்கும் Nothing Phone(1): அறிமுக தேதி, அம்சம், விலை!மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு- ஐபோனுக்கு போட்டியாக களமிறங்கும் Nothing Phone(1): அறிமுக தேதி, அம்சம், விலை!

உயர்தர படங்கள் மற்றும் துல்லியமான வீடியோக்கள்

உயர்தர படங்கள் மற்றும் துல்லியமான வீடியோக்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனத்தின் முன்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் தன்மையை கொண்டுவருவது இதுவே முதல் முறையாகும். அதேபோல் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ சாதனத்தின் செல்பி கேமரா 5பிக்சல் மற்றும் f/2.2 aperture மட்டுமே கொண்டிருந்த நிலையில் ஐபோன் 14 சாதனத்தில் 6பிக்சல் லென்ஸ் மற்றும் பிரைட் f/1.9 aperture இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்தர படங்கள் மற்றும் துல்லியமான வீடியோக்களை பதிவு செய்யலாம். பல ஆண்டுகள் கண்டிறாத மிகப்பெரிய முன்புற கேமரா மேம்படுத்தலை இந்த ஐபோன் சாதனம் கொண்டிருக்கும் என ஆய்வாளர் குவோ தெரிவித்தார்.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ஐபோன் 14

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா ஐபோன் 14

ஐபோன் 14 சாதனம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது. செப்டம்பர் மாதம் நடப்பதாக கூறப்படும் ஆப்பிள் அறிமுக நிகழ்வில் ஐபோன் 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதுவரை காத்திருந்து ஐபோன் 14 நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதை அறியலாம்.

File Images

Best Mobiles in India

English summary
Iphone 14 May Launch With Biggest Front Camera Upgrade: Apple Analyst

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X