இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.! ரேட் எவ்வளவு தெரியுமா?

|

ஜனவரி 25ஆம் தேதி ப்ளிப்கார்ட் (Flipkart) இணையதளத்தில் பிரத்தியேகமாக அறிமுகமாகவிருக்கும் இன்பினிக்ஸ் நோட் 12i (Infinix Note 12i) ஸ்மார்ட் போன் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதன் விலை குறித்த தகவல் ஒன்று வெளியாகி மக்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,000-க்கும் குறைவாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மலிவான விலையுடன் சேர்த்து பிரத்தியேகமான ஜியோ ஆஃபருடன் (Jio offer) வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை அது அறிமுகம் செய்யப்படும் போது தான் தெரிய வரும்.

இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.!

இந்த இன்பனிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு கம்மி விலைக்கு இத்தகைய அம்சங்கள் கிடைக்கின்றதா என்று மக்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதன் காரணமாகவே இந்த ஸ்மார்ட்போனுக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது என்றே கூறலாம்.

மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசசர் (MediaTek Helio G85 Processor), AMOLED டிஸ்ப்ளே, 33W அதிவேக சார்ஜிங் சப்போர்ட் (Charging support) கொண்ட 5000 mAh பேட்டரி போன்ற மேம்பட்ட அம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் போனின் மற்ற அம்சங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேலே கூறப்பட்டது போல 6.7' இன்ச் FHD+ AMOLED திரை கொண்டு வரும் இந்த இன்பினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் 2400 x 1080 பிக்சல் ரெசல்யூசன் (Pixel Resolution), 60Hz ரிஃப்ரெஷ் ரேட் (Refresh Rate), 180Hz டச் சாம்பலிங் ரேட் (Touch sampling rate) மற்றும் 1000 நீட்ஸ் பீக் பிரைட்னெஸ் (Brightness) ஆகியவற்றுடன் வருகிறது.

இது 12nm மீடியாடெக் ஹீலியோ G85 ப்ராசசர் கொண்டு இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 1000MHz ARM Mali-G52 2EEMC2 GPU, 4 GB LPDDR4x ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் திறனை 512 GB வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இந்த இன்பினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனில் 3 GB விர்ச்சுவல் ரேம் (virtual RAM) சப்போர்டும் உள்ளது.

இவ்வளவு கம்மி விலைனா கண்டிப்பா Infinix Note 12i வாங்கலாமே.!

XOS 10.6 கஸ்டம் ஸ்கின் (Custom skin) அம்சத்துடன் ஆண்ட்ராய்டு 12 தளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4G VoLTE, ப்ளூடூத் 5, வைஃபை, GPS+GLONASS மற்றும் டைப் சி USB ஸ்லாட் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 33W அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா அம்சத்தைப் பொறுத்தவரை இந்த இன்பினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் (Depth Sensor) என்று இரண்டு பின்பக்க கேமராக்களுடன் வருகிறது. மேலும், செல்ஃபி (Selfie) மற்றும் வீடியோ சாட்களுக்கு (Video Chat) வசதியாக 8MP கேமராவும் முன்பக்க டிஸ்பிளேவில் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்திற்காக ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்டு வரும் இந்த ஸ்மார்ட் போன் 182 கிராம் எடையும் 164.47 x 76.70 x 7.8mm அளவும் கொண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த டிவைஸ் மிகவும் மலிவு விலையில் எதிர்பார்க்கப்படுவதனால், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Note 12i price in India leaked before launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X