50% பேர் porn வீடியோ பார்க்க காரணம் இதுதான்! மீதம் 50% இருக்காங்களே! ஆய்வு முடிவை பாருங்க புரியும்!

|

காமன் சென்ஸ் மீடியா என்ற லாப நோக்கற்ற அமைப்பினால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், டீனேஜ் வயதுடையவர்களில் 44 சதவீதம் பேர் ஆன்லைனில் ஆபாசப் படங்களை வேண்டுமென்றே பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் தற்செயலாக ஆபாசப் படங்களை காண்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முழு தகவலை விரிவாக பார்க்கலாம்.

டீனேஜர்கள் மற்றும் குழந்தைகளிடையே ஏற்படும் விளைவுகள்

டீனேஜர்கள் மற்றும் குழந்தைகளிடையே ஏற்படும் விளைவுகள்

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் தீமைகளால் டீனேஜர்கள் மற்றும் குழந்தைகளிடையே ஏற்படும் விளைவுகள் குறித்து ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் நிஜ வாழ்க்கையில் நேரத்தை செலவிடுவதை விட மொபைல் போனில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

அதிக நேரம் மொபைல் பயன்படுத்தவதால் ஏற்படும் மனநல பிரச்சனைகள் குறித்த பல விவதாங்கள் நடத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் பெற்றோர்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது மிக அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வெளியான ஆய்வு தகவல்

வெளியான ஆய்வு தகவல்

இந்தநிலையில் காமன் சென்ஸ் மீடியா என்ற லாப நோக்கற்ற அமைப்பினால் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி "டீன் ஏஜ் அண்ட் பார்னோகிராபி" என்ற அறிக்கையில் 13 முதல் 17 வயதுடைய பதின்ம வயதினரில் 73 சதவீதம் பேர் ஆன்லைன் ஆபாசப் படங்களை பார்ப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல் 54 சதவீதம் பேர் அவர்கள் 13 வயதை அடையும் போதே முதல் ஆபாசப் படத்தை பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆபாசப் படங்கள்

ஆன்லைன் ஆபாசப் படங்கள்

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் டீனேஜ் வயதினரில் பாதி பேர் அதாவது 45 சதவீதம் பேர் ஆன்லைன் ஆபாசப் படங்கள் செக்ஸ் பற்றிய உதவிகரமான தகவலை தருகிறது என உணர்வதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் ஆபாசப் படங்கள் என்பது இணையதளங்கள், சமூகவலைதளங்கள் அல்லது இணையத்தின் குறிப்பிட்ட தளத்தில் பார்க்கப்படும் வீடியோ அல்லது புகைப்படங்களை குறிக்கிறது.

ஆபாச படங்கள் பார்ப்பது சரி

டீனேஜர்களில் 15% பேர் 10 அல்லது அதற்கு குறைவான வயதில் ஆன்லைனில் ஆபாசப் படங்களை பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர் அதாவது ஏறக்குறைய 44 சதவீதம் பேர் வேண்டுமென்றே ஆபாசப் படங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்செயலாக ஆபாசப் படங்கள் பார்த்ததாக தகவல்

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 58 சதவீதம் பேர் தற்செயலாக ஆபாசப் படங்களை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

எடுக்கப்பட்ட சர்வேயில் ஆபாச படங்களை பார்த்த டீனேஜர்களில் பெரும்பாலானோர் அதாவது 67% பேர் ஆபாசப் படங்கள் பார்ப்பது சரி என்று கூறி இருக்கின்றனர். அதேபோல் மீதமுள்ள பாதி பேர் அதாவது 50 சதவீதம் பேர் ஆபாசப் படங்களை பார்த்த பிறகு குற்ற உணர்வு அல்லது வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

டீன் ஏஜ் மற்றும் ஆபாசப் படங்கள்

டீன் ஏஜ் மற்றும் ஆபாசப் படங்கள்

"டீன் ஏஜ் மற்றும் ஆபாசப் படங்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் டிக்டாக் தடை

இந்தியாவில் டிக்டாக் தடை

தற்செயலாக ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களில் 38 சதவீதம் பேர் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களை பார்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இது இன்னும் உலகம் முழுவதும் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆபாச தளங்களுக்கு தடை

ஆபாச தளங்களுக்கு தடை

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி, இந்திய அரசாங்கம் பல ஆபாச தளங்களை தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்ட தளங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு விதிகளை மீறி செயல்பட்ட 63 ஆபாச இணையதளங்களை தடை செய்யும்படி இணைய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதேபோல் கடந்தமுறை 800 ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Here the reason why 50% of Teens Watch Porn Videos! More than 50% Watch accidentally

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X