தமிழகத்தின் மீனவர்களுக்கு உதவிய இஸ்ரோ: நவீன தொழில்நுட்பம்: இனி ஆழ்கடலில் "இதை" செய்யலாம்.!

|

இப்போது சில புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் சில புதிய தொழில்நுட்பங்கள் நமது தினசரி வேலையைக் குறைக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் தமிழக மீனவர்களுக்காகப் பயனுள்ள ஒரு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நீலப் புரட்சி திட்டம்

நீலப் புரட்சி திட்டம்

அதாவது தமிழகத்தில் உள்ள 4997 இயந்திர படகுகளில் 18.1 கோடி மதிப்பீட்டில் டிரான்ஸ்பாண்டர்ககளை பொருத்தும் நீலப் புரட்சி திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் 10 உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இருந்து கருவிகளைத் தலைமை செயலகத்தில் பெற்றனர்.

புது வருடத்தில் நல்ல செய்தி சொன்ன Samsung: தரமான சிப்செட் கொண்ட 5G போன் விரைவில் அறிமுகம்.!புது வருடத்தில் நல்ல செய்தி சொன்ன Samsung: தரமான சிப்செட் கொண்ட 5G போன் விரைவில் அறிமுகம்.!

அதிநவீன கருவி

குறிப்பாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த உரிமையாளர்கள் இந்த அதிநவீன கருவிகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் சிறப்பான அம்சங்களைப் பார்ப்போம்.

இந்த OnePlus 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க அதிக ஆர்வம் காட்டும் மக்கள்: அப்படியென்ன ஸ்பெஷல்?இந்த OnePlus 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க அதிக ஆர்வம் காட்டும் மக்கள்: அப்படியென்ன ஸ்பெஷல்?

 ஆழ்கடலில் உதவும்

ஆழ்கடலில் உதவும்

அதாவது ஆழ்கடலில் மீனவர்களின் படகு இருக்கும் இடத்தையும், அதன் வழித்தடத்தையும் துல்லியமாகக் கண்டறிந்து, மீட்பு பணிகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு இந்த நவீனத் தொழில்நுட்பம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!பியூச்சர்ல லேப்டாப்லாம் இப்படி மாறிடுமா? Lenovo-வின் டூயல் டிஸ்பிளே லேப்டாப்.! 1 இல்ல 3 டைப்ல யூஸ்.!

மத்திய கட்டுப்பாட்டு அறை

இதுதவிர இருவழித் தொடர்பை வழங்குகிறது இக்கருவி. பின்பு இது மீனவர்களுக்குத் தகவல் அனுப்பவும், பெறவும் உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சூறாவளி, புயல் அல்லது கனமழையின் போது, ஆழ்கடலில் உள்ள படகுகளில் இருந்து மீன்வளத் துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறை மற்றும் படகு உரிமையாளருக்குச் செய்திகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!2023 ஆரம்பமே அமோகமா இருக்கே! இந்தியாவில் அடுத்த 10 நாட்களில் 7 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ லிஸ்ட்!

ப்ளூடூத்?

ப்ளூடூத்?

மேலும் ப்ளூடூத் உடன் இணைப்பதன் மூலமும், டிரான்ஸ்பாண்டர்களை சரிசெய்த பிறகு மொபைல் செயலியைப் பயன்படுத்துவதன் மூலமும் மீனவர்கள் தகவல்களைப் பெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் புதிய தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ரூ.319 முதல் எக்கச்சக்க சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்லின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!ரூ.319 முதல் எக்கச்சக்க சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்லின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஆர்எல்வி ராக்கெட்

ஆர்எல்வி ராக்கெட்

அதேபோல் இஸ்ரோ இந்த ஆண்டு அறிவியல் திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவுள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஆர்எல்வி ராக் கெட்டை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏரோனாடிக்கல் பரிசோதனை மையத்தில் இன்னும் சில மாதங்களில் இஸ்ரோ தரையிறக்கி பரிசோதிக்கவுள்ளது.

ரூ.319 முதல் எக்கச்சக்க சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்லின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!ரூ.319 முதல் எக்கச்சக்க சலுகைகளை அள்ளித் தரும் ஏர்டெல்லின் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

சந்திரயான்-3

சந்திரயான்-3

இதுதவிர சூரியனை பற்றி ஆய்வு செய்ய ஆதித்யா என்ற விண்கலத்தை இஸ்ரோ இந்தாண்டு அனுப்பஉள்ளது. மேலும் நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தையும் இஸ்ரோ அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Government of Tamil Nadu installed transponders developed by ISRO in fishermen's boats: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X