Just In
- 1 hr ago
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 12 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 15 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
Don't Miss
- News
"செந்தில் பாலாஜி வந்துவிட்டாலே வெற்றி உறுதி.. அவர் எனக்கு இன்னொரு மகன்.." உருகிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
- Movies
விக்ரம் vs லியோ.. ஒவ்வொரு ஃபிரேமும் அப்படியே செதுக்கியிருக்காரே லோகேஷ்.. தெறிக்கும் கம்பேரிசன்ஸ்!
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2023 வேதனை: சில கம்ப்யூட்டர்களில் Chrome சேவையை நிறுத்தும் கூகுள்: ஏன்?
கூகுள் குரோம்-ஐ உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கணினி மற்றும் போன்களில் இந்த கூகுள் குரோம்-ஐ பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்றே கூறலாம். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது புதிய குரோம் பதிப்பை வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியிட உள்ளது.

பழைய பதிப்பு
மேலும் குரோம் புதிய பதிப்பு வெளியிடும் போது, பழைய பதிப்புகளை சில கம்ப்யூட்டர்களில் கூகுள் நிறுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இனி விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களில் கூகுள் குரோம் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.

பெயரளவில் மட்டும் தான்..
அதேபோல் விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இனி கூகுள் குரோம் ஆனது பெயரளவில் மட்டும் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் இணையதளங்கள் இருந்தாலோ அல்லது வேறு ஏதும் சிக்கலான வலைத்தளம் சென்றாலோ கூகுள் குரோம் அவற்றைத் தடுத்து நிறுத்தாது. எனவே பழைய இயங்குதளத்தை நீங்கள் இன்னும் பயன்படுத்தி வந்தால் உடனே புதிய விண்டோஸ்-க்கு மாறும்படி பரிந்துரைக்கப்படுகிறது..

புரட்சியை ஏற்படுத்தியது
குறிப்பாக இந்த விண்டோஸ் 7 இயங்குதளம் ஆனது ஒரு காலத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அதாவது இந்த விண்டோஸ் 7 இயங்குதளம் ஆனது கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைவரும் இணையத்தை எளிமையாகப் பயன்படுத்த இந்த விண்டோஸ் 7 இயங்குதளம் அருமையாக உதவியது. பின்பு விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10, விண்டோஸ் 11 என எல்லாம் வந்து விட்டது.

விண்டோஸ் 7..
ஆனாலும் இன்று வரை பலரும் இந்த விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் கடந்த ஜூன் மாதம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோளர் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோளர்-க்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், பிரபல மென்பெருள்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களும் தங்கள் கணினியைப் அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் கூகுள் நிறுவனம் ஒரு புத்தம் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கையெழுத்து?
அதாவது நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் அவரின் கையெழுத்து நமக்குப் புரிந்திருக்கிறதா? அல்லது நமக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே இப்படி எழுதுகிறார்கள்? இப்படியெல்லாம் உங்களுக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கலாம். இனிமேல் அந்த கவலை உங்களுக்கு இருக்காது.
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் இருக்கும் மருந்துகளின் பெயர்களை இனிமேல் எளிமையாகத் தெரிந்துகொள்ளும் புதிய அம்சத்தைக் கூகுள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கண்டிப்பாக நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

கூகுள் ஃபார் இந்தியா
கூகுள் நிறுவனத்தின் நடத்திய கூகுள் ஃபார் இந்தியா என்ற வருடாந்திர நிகழ்வில் புதிய கூகுளின் அம்சங்களைக் குறித்து அறிவித்துள்ளது. அதேபோல் இந்த நிகழ்வில் மருத்துவர்களின் மருந்துச்சீட்டை அறிந்து கொள்ளும் ஆர்ட்ஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) மாடல் குறித்து கூகுள் வேலை செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய அம்சம் ஆராய்ச்சியில் இருப்பதாகவும், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவில்லை என்றும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய அம்சம் பயன்பாட்டுக்கு வரும்போது, மருந்துச்சீட்டை புகைப்படம் எடுத்தோ அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை எடுத்தோ, அதைக் கூகுள் ஆப்பிள் பதிவிடும் போது,என்னென்ன மருந்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470