Just In
- 1 hr ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 hr ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 2 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- 3 hrs ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
Don't Miss
- News
"அன்பு, மதம், கோட்பாடு, பண்பாடுனு எல்லாம் சொல்லுவாங்க.. நம்பிடாதீங்க.." மாணவிகளுக்கு கனிமொழி அட்வைஸ்
- Movies
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பணம் செலுத்தியும் ஸ்மார்ட்போனை சரியான நேரத்தில் டெலிவரி செய்யாத Flipkart-க்கு அபராதம்.! எவ்வளவு தெரியுமா?
இந்தியா முழுவதும் பிளிப்கார்ட் தளத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது இந்த பிளிப்கார்ட் நிறுவனம். இதுதவிர ஸ்மார்ட்போன்களை இந்த தளத்தில் வாங்கும் பயனர்களும் சிறப்பு தள்ளுபடி கூட கிடைக்கிறது. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூ.42,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம்.

பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர்
அதாவது பெங்களூரு ராஜாஜி நகரில் திவ்யஸ்ரீ என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அன்று ரூ.12,499-விலை கொண்ட புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் கொடுத்துள்ளார். குறிப்பாக இதற்கான முழு பணத்தையும் முன்கூட்டியே அவர் செலுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

டெலிவரி செய்யவில்லை..
குறிப்பாக பிளிப்கார்ட் தளத்தில் திவ்யஸ்ரீ ஆர்டர் செய்திருந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 16-ம் தேதி டெலிவரி செய்யப்படும் என்று அவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த சரியான தேதியில் பிளிப்கார்ட் ஸ்மார்ட்போனை டெலிவரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் புகார்
மேலும் இதைதொடர்ந்து சரியான நேரத்தில் ஸ்மார்ட்போனை டெலிவரி செய்யாததால் நிதி இழப்பு மற்றும் மன உளைச்சலுக்குத் தாம் ஆளாகியாதக் கூறி பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றத்தில் திவ்யஸ்ரீ புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திவ்யஸ்ரீ அளித்தார் புகாரில், வாடிக்கையாளர் சேவை மையத்தைப் பலமுறை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர்கள் உரியப் பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த புகாரை விசாரித்துவந்த பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.

அலட்சியம் காட்டியது பிளிப்கார்ட்
ஆனால் பிளிப்கார்ட் தரப்பில் இருந்து யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பிளிப்கார்ட் நிறுவனம் தனது சேவை அலட்சியம் காட்டியது மட்டுமின்றி நெறிமுறையற்ற நடைமுறைகளையும் பின்பற்றுகிறது என்று கூறியது.

பிளிப்கார்ட்-க்கு அபராதம்
மேலும் பாதிக்கப்பட்ட அந்த வாடிக்கையாளருக்கு 12 சதவீத வருடாந்திர வட்டியுடன் ரூ.12,499 பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்றும், பின்பு வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 20,000 ரூபாயும் அவரது வழக்குச் செலவுக்காக 10,000 ரூபாயும் செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தான் சிறந்தது?
அதேபோல் நேரில் சென்று பொருட்கள் வாங்குவதை விட ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது தான் சிறந்தது என்ற முடிவுக்கு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வந்து விட்டனர். நேரில் சென்று வாங்கும் விலையை விட ஆன்லைன் போர்ட்டல்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம். ஆனாலும் சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு ஒரு பொருள் வருவதும் உண்டு. சில நேரங்களில் நாம்ஆர்டர் செய்த சாதனம் தாமதமாகக் கூட வருகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470