குழப்பம் வேண்டாம் நாங்க இருக்கோம்: "டாப் அம்சம்"., தொழில் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கான சிறந்த லேப்டாப்கள்!

|

கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழத் தொடங்கி இருக்கிறது. அப்படி கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் பட்சத்தில் ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை உள்ளிட்டவைகளுக்கு லேப்டாப் என்பது பிரதான தேவையாகும். ரூ.50,000 விலைப்பிரிவில் உகந்த அம்சங்களோடு கிடைக்கும் சிறந்த லேப்டாப்கள் பட்டியலை பார்க்கலாம்.

பல்வேறு விலைப் பிரிவுகளில் லேப்டாப்கள்

பல்வேறு விலைப் பிரிவுகளில் லேப்டாப்கள்

பல்வேறு விலைப் பிரிவுகளில் லேப்டாப்கள் கிடைத்தாலும் ரூ.50,000 என்ற மிட்ரேஞ்ச் விலைப் பிரிவில் லேப்டாப்கள் வாங்கும் போது வேலை மற்றும் தொழிற்முறை பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும். அதேபோல் கேமிங், ஸ்ட்ரீமிங் போன்ற பொழுதுபோக்கு அம்சத்துக்கு லேப்டாப் தேடுபவராக இருந்தால், உங்களுமான பட்டியலாக இது இருக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

உங்களின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டியல்

உங்களின் தேவையை பூர்த்தி செய்யும் பட்டியல்

கல்வி, தனிப்பட்ட பயன்முறை, தொழிற்முறை, மல்டிமீடியா உள்ளிட்ட பல்வேறு தேவைகளையும் இந்த பட்டியலில் உள்ள லேப்டாப்கள் பூர்த்தி செய்யும். ஸ்மார்ட்போன்களை அதன் மேலோட்ட அம்சங்கள் மற்றும் விலைப் பிரிவை வைத்து கணித்து விடலாம். ஆனால் லேப்டாப்பை அப்படி கணிப்பது சற்று சிரமம். உங்கள் சிரமத்தை போக்குவதற்கு இந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

எச்பி, அசுஸ், லெனோவா

எச்பி, அசுஸ், லெனோவா

ரூ.50,000 விலைப் பிரிவில் கிடைக்கும் லேப்டாப்கள் பெரும்பாலும் i3 அல்லது i5 செயலிகள் மூலமாகவே இயங்குகின்றன. கீழே ரூ.50,000 விலை பிரிவுப் பட்டியலில் டச் ஆதரவுடன் கூடிய லேப்டாப்களும் இடம்பெற்றிருக்கிறது. இந்த விலைப் பிரிவில் கிடைக்கும் லேப்டாப்களில் எச்பி, அசுஸ், லெனோவா உள்ளிட்ட உயர் பிராண்ட் சாதனங்களும் அடங்கும்.

டிஸ்ப்ளே அளவு, ரேம், சேமிப்பு திறனை கவனிப்பது அவசியம்

டிஸ்ப்ளே அளவு, ரேம், சேமிப்பு திறனை கவனிப்பது அவசியம்

இடைநிலை மடிக்கணினிகள் வாங்கும் பட்சத்தில் அதன் டிஸ்ப்ளே அளவு, ரேம், சேமிப்பு திறன் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட லேப்டாப்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதை ஆன்லைன் மூலமாகவே வாங்கலாம். இந்த பட்டியலில் தங்களுக்கான தேவையான சிறந்த சாதனத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

டெல் 15 இன்டெல் i3-1115G4 லேப்டாப்

டெல் 15 இன்டெல் i3-1115G4 லேப்டாப்

டெல் வழங்கும் புதிய 15 இன்டெல் i3-1115G4 லேப்டாப் ஆனது ரூ.56,776 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் தளத்தில் தற்போது ரூ.41,490 என கிடைக்கிறது. டெல் 15 இன்டெல் i3-1115G4 லேப்டாப்புக்கு அமேசான் தளத்தில் 27% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே, 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு, விண்டோஸ் 10+ எம்எஸ் ஆஃபிஸ் உள்ளிட்ட ஆதரவுகள் இருக்கிறது. கார்பன் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் இந்த லேப்டாப் இன்டக்ரேடட் கிராஃபிக்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. எளிதாக அனைத்து இடத்துக்கும் எடுத்துச் செல்லும் வகையில் இதன் எடை 1.8 கிலோவாக இருக்கிறது.

எச்பி ரைசன் 3-3250 லேப்டாப்

எச்பி ரைசன் 3-3250 லேப்டாப்

எச்பி நிறுவனத்தின் ரைசன் 3-3250 லேப்டாப் ஆனது ரூ.48,294 என்ற விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது அமேசானில் ரூ.40,990 என வாங்கலாம். அமேசான் தளத்தில் இந்த சாதனத்துக்கு 15% (ரூ.7304) வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பும் 15.6 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே ஆதரவோடு கிடைக்கிறது. இது மிகவும் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவுடன் விண்டோஸ் 10 எம்எஸ் ஆஃபிஸ் அணுகலை கொண்டிருக்கிறது. இதன் எடையும் 1.8 கிலோவாக இருக்கிறது. சில்வர் வண்ண விருப்பத்தில் இந்த லேப்டாப்பை வாங்கலாம்.

எச்பி க்ரோம்புக் லேப்டாப்

எச்பி க்ரோம்புக் லேப்டாப்

எச்பி க்ரோம்புக் லேப்டாப் ஆனது இந்த விலைப் பிரிவில் கிடைக்கும் பிற லேப்டாப்களை விட வடிவமைப்பு மற்றும் லுக்கில் சிறந்ததாக இருக்கிறது. அதேபோல் இதன் எடை வெறும் 1.46 கிலோ ஆகும். இந்த லேப்டாப் ஆனது க்ரோம் ஓஎஸ், கூகுள் அசிஸ்டென்ட், பிஎல் கீபோர்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிற லேப்டாப்களுடன் ஒப்பிடும் போது இதன் அம்சம் சற்று குறைவாக இருக்கிறது. அதேசமயத்தில் இதன் விலையும் அதற்கேற்ப குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த லேப்டாப் விலையானது ரூ.23,490 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அமேசானில் இந்த சாதனத்துக்கு 21%(ரூ.6251) வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த லேப்டாப்பை ரூ.23,490 என வாங்கலாம்.

டெல் இன்ஸ்பிரோன் 3501 லேப்டாப்

டெல் இன்ஸ்பிரோன் 3501 லேப்டாப்

டெல் இன்ஸ்பிரோன் 3501 லேப்டாப் ஆனது ரூ.55,490 என விற்கப்பட்டது. தற்போது இந்த லேப்டாப்வை சிறந்த தள்ளுபடியுடன் வாங்கலாம். அமேசானில் இந்த லேப்டாப்புக்கு 30% (ரூ.16,780) வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த லேப்டாப்பை ரூ.38,710 என வாங்கலாம். தொழில்முறை தேவைகளுக்கு என்று பார்க்கையில் பெரும்பாலானோரின் தேர்வு டெல் லேப்டாப் ஆக தான் இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது இன்டெல் ஐ3-1005ஜி1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 1.96 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப் விண்டோஸ் 10+ எம்எஸ்ஓ ஆதரவைக் கொண்டுள்ளது.

அசுஸ் விவோபுக் 14 (2020) லேப்டாப்

அசுஸ் விவோபுக் 14 (2020) லேப்டாப்

அசுஸ் விவோபுக் 14 (2020) லேப்டாப் ஆனது ரூ.43,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த லேப்டாப் ரூ.30,990 என அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சலுகை இன்று (ஜூன் 14) இரவு 12 மணியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கேமிங் பிரியர்கள் பலரின் தேர்வு அசுஸ் லேப்டாப் தான். காரணம் கேமிங் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அசுஸ் லேப்டாப்கள் வடிவமைக்கப்படுகிறது. இந்த லேப்டாப் 14 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே, ஏஎம்டி ரைசன் 3 3250யூ ஆதரவோடு கிடைக்கிறது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2021 லேப்டாப்

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2021 லேப்டாப்

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 2021 லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ33 11-வது தலைமுறை ஜென் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் முழுக்க தொழிற்முறை பயன்பாடுகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் விலை ரூ.49,990 ஆக இருந்த நிலையில் தற்போது இது ரூ.44,700 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்புக்கு அமேசானில் 11% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் ஆனது 14 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே ஆதரவோடு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.1.41 கிலோ எடை கொண்ட இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஹோம் மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Excellent laptops for business and personal needs at under Rs.50,000: Right choice to buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X