ஜன., 15 வரை எந்த போனும், டிவியும் வாங்காதீங்க: Amazon, Flipkart இடையே நடக்க இருக்கும் போட்டி!

|

Amazon கிரேட் குடியரசு தின விற்பனையில் ஆப்பிள், ஒன்ப்ளஸ், ரெட்மி, போக்கோ, சாம்சங் உள்ளிட்ட ஏணைய ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் சில நாட்கள் மட்டும் காத்திருப்பது நல்லது.

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் பயனர்களுக்கான இந்த தள்ளுபடி ஜனவரி 16 முதல் தொடங்குகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கார்ட்கள் மூலம் புதிய எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17 முதல் தொடக்கம்

ஜனவரி 17 முதல் தொடக்கம்

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் பயனர்களுக்கு ஜனவரி 16 முதல் இந்த விற்பனை தொடங்குகிறது. மற்ற அனைவருக்கும் இந்த விற்பனையானது ஜனவரி 17 முதல் தொடங்குகிறது. அதேபோல் இந்த விற்பனையானது ஜனவரி 20 வரை நடைபெறும்.

Amazon Great Republic Day விற்பனையில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கிறது. இந்த தினங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

உடனடி தள்ளுபடி

உடனடி தள்ளுபடி

குடியரசு தின விற்பனையில் ஆப்பிள், ஒன்பிளஸ், ரெட்மி, போக்கோ, சாம்சங் உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் அமேசானில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளாட் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் பயனர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம். இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14

அமேசானில் தள்ளுபடி குறித்த விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 உள்ளிட்ட ஆப்பிள் ஐபோன்கள் விற்பனையில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என டீஸர் சுட்டிக்காட்டி உள்ளது. அதேபோல் சாம்சங், சியோமி உள்ளிட்ட பல பிராண்டுகளின் போன்களும் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

40 சதவீதம் வரை தள்ளுபடி

40 சதவீதம் வரை தள்ளுபடி

அமேசான் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடியை பெறும் என தகவலை தளம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 10டி, சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ, ஐக்யூ நியோ 6, ரெட்மி நோட் 11 உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் அதீத தள்ளுபடியை பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஃபிட்னஸ் பேண்ட் வகைக்கு 75% வரை தள்ளுபடி

ஃபிட்னஸ் பேண்ட் வகைக்கு 75% வரை தள்ளுபடி

முன்னதாகவே குறிப்பிட்டது போல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, அமேசானில் லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பல எலெக்ட்ரானிக் பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஸ்மார்ட்போன்கள் போன்றே லேப்டாப்களும் 40 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஃபிட்னஸ் பேண்ட் வகைக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் ஸ்பீக்கர்கள் வகைகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தள்ளுபடி

எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தள்ளுபடி

இதுமட்டுமின்றி ஸ்மார்ட் டிவிகள், ஃபிர்ட்ஜ், வாஷிங் மெஷின்கள், ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட பல முக்கிய சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

நோ-காஸ்ட் இஎம்ஐ, வங்கித் தள்ளுபடி என பல சலுகைகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயமும் இருக்கிறது.

பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனை ஆனது ஜனவரி 15 முதல் தொடங்கி ஜனவரி 20 வரை நடக்கிறது. கேட்கவே வேண்டாம், இதிலும் தள்ளுபடிகள் அள்ளி வழங்கப்பட இருக்கிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

எது எப்படியோ, நீங்கள் புதிய ஸ்மார்ட்போன்களோ அல்லது வேறு ஏதேனும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கத் திட்டமிட்டுருந்தால் இன்னும் சில தினங்கள் மட்டும் காத்திருப்பது நல்லது. உங்களுக்கு விருப்பமான பொருட்களை இரண்டு தளங்களிலும் ஒப்பிட்டு எதில் பெஸ்ட் தள்ளுபடிகள் கிடைக்கிறதோ அதில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Don't Buy New Smartphone, Smart TV until jan 15: Amazon Great Republic Day Sale Date Announced.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X