Home
Deal of the day

SALE பிச்சிக்கிட்டு போகுது.. ஆபரில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 7000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஓப்போ எப்31 5ஜி (OPPO F31 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விவரங்கள் இதோ.

பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.24,999 விலைக்கு இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனுக்கும் ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கும்.

SALE பிச்சிக்கிட்டு போகுது.. ஆபரில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ஓப்போ எப்31 5ஜி அம்சங்கள் (OPPO F31 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டமானது, இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு ஓம்னிவிஷன் ஓவி50டி40 சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி வருகிறது.

டெப்த் கேமராவுக்கு கேலக்ஸி கோர் 02எம்1பி (Galaxy Core 02M1B) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி மோட், ஏஐ நைட் மோட், போர்ட்ராய்டு மோட், ஏஐ போர்ட்ராய்டு ரீடச்சிங் மற்றும் மோஷன் போட்டோ பீச்சர்கள் உள்ளன.

ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எனர்ஜி (Octa Core 6nm MediaTek Dimensity 6300 Energy) சிப்செட்டை இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு கலர்ஓஎஸ் 15.0 (ColorOS 15.0) கொடுக்கப்பட்டு உள்ளது.

கலர்ஓஎஸ் கிடைப்பதால், டிரினிட்டி என்ஜின், லூமினஸ் ரென்டரிங் என்ஜின், 72 மாதங்களுக்கு ப்ளூயன்சி புரொடெக்சன் கிடைத்து உள்ளது. மேலும், ஏஐ ரீகம்ப்போஸ், ஏஐ பர்பெக்ட் ஷாட், ஏஐ எரைசர் 2.0, ஏஐ ரெஃப்ளெக்சன் ரீமூவர் மற்றும் ஏஐ அன்பிளர் உள்ளிட்ட கேமரா பீச்சர்களும் கொடுக்கப்படுகிறது. இதுபோக டாகுமெண்ட், நோட்ஸ்களுக்கு ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது.

6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த ஓப்போ எப்31 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் கிடைக்கிறது. டிடி-ஸ்டார் டிபிளஸ் (DT Star D+) புரொடெக்சனை இந்த டிஸ்பிளே கொடுத்துள்ளது.

8 எம்எம் தடிமனில் 7000mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. 185 கிராம் எடை மட்டுமே வருகிறது. மேலும், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்ட IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கிடைக்கிறது. மேலும், MIL-STD-810H மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO F31 5G With 8GB RAM Available At Rs 2500 Bank Discount on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X