ஹர்திக் பாண்டியாவே இந்த போன்தான் யூஸ் பண்றாரா? இது இன்னும் இந்தியாவுக்கே வரலயேப்பா!

|

POCO X5 Pro 5G அறிமுகமாவதற்கு முன்னதாவே இந்திய கிரிக்கெட் வீரர் Hardik Pandya அதை பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார். அதேபோல் POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்கை "லீக்" செய்தவர் ஹர்திக் பாண்டியா என்றும் குறிப்பிடலாம். அறிமுகமாவதற்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியா எப்படி இந்த போனை வாங்கினார், இந்த புகைப்படம் வைரலாக காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

POCO X5 Pro 5G

POCO X5 Pro 5G

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு அம்சங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வரும் நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதுவும் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மூலமாக என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா

POCO நிறுவனம் தனது POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. பிப்ரவரி மாத இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்பாகவே, புதிய போக்கோ எக்ஸ் ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரரும் T20I கேப்டனுமான ஹர்திக் பாண்டியா POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை புகைப்படத்தில் காண முடிகிறது.

புகைப்படத்தை பார்த்தால் புரியும்

புகைப்படத்தை பார்த்தால் புரியும்

பொதுவாக ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ அம்சங்கள் குறித்த சில தகவல்கள், ரெண்டர்கள், ஸ்மார்ட்போன் எடிட் புகைப்படம் வெளியாவது வழக்கம். ஆனால் தற்போது, போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படமே வெளியாகி உள்ளது.

புகைப்படத்தை பார்த்தால் புரியும், ஹர்திக் பாண்டியா கையில் வரவிருக்கும் POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனை வைத்து பயன்படுத்துகிறார். இதன்மூலம் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் உறுதிப்படுத்தப்படுகிறது.

உறுதியான சில அம்சங்கள்

உறுதியான சில அம்சங்கள்

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் மஞ்சள் நிற மாறுபாட்டில் இருக்கும் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிராண்டின் ஐகானிக் டூயல் டோன் ரியர் டிசைன் மற்றும் பெரிய கேமரா மாட்யூல் என ஸ்மார்ட்போனின் பின்புற மேற்பகுதி முழுவதும் தெளிவாகத் தெரிகிறது.

அதேபோல் பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காண முடிகிறது. இந்த லீக்கில் ஸ்மார்ட்போனின் முன்பகுதி எதுவும் தென்படவில்லை.

POCO X5 Pro 5G சிறப்பம்சங்கள்

POCO X5 Pro 5G சிறப்பம்சங்கள்

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 12 ஸ்பீடு பதிப்பின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தினங்களுக்கு முன்பு ரெட்மி நோட் 12 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி இருக்கும்பட்சத்தில் இதன் அம்சங்களையும் கணித்துவிடலாம்.

ஸ்னாப்டிராகன் 778G சிப்செட்

ஸ்னாப்டிராகன் 778G சிப்செட்

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வெளியாகலாம்.

108 எம்பி முதன்மை கேமரா

108 எம்பி முதன்மை கேமரா

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இதில் 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்றும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோகால் ஆதரவுக்கு என 16 எம்பி கேமரா இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

POCO X5 Pro 5G ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படலாம்.

யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவு இதில் இருக்கும். அதேபோல் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Does Hardik Pandya use this phone? This is yet to come to India!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X