பட்ஜெட் விலையில் பக்காவான புது Vivo 5ஜி போன் ரெடி.. 50எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் அடுத்து பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. அதாவது இந்நிறுவனம் விவோ ஒய்21 5ஜி (Vivo Y21 5G) எனும் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
விவோ ஒய்21 5ஜி அம்சங்கள் (Vivo Y21 5G specifications): 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் புதிய விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். PowerVR GE8320 கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய விவோ போனில் உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் விவோ ஒய்21 5ஜி அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்21 5ஜி வெளியாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் உள்ளது. இதுதவிர பேஸ்அன்லாக் வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.
6500mAh பேட்டரி உடன் புதிய விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி எல்இடி, யுஎஸ்பி டைப்-சி, ஒடிஜி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய விவோ ஒய்21 5ஜி போனில் உள்ளன. பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
குறிப்பாக விவோ ஒய்21 5ஜி ஸ்மார்ட்போன் முதலில் உலக சந்தையில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியாவில் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை BTN 16,190 (இந்திய மதிப்பில் ரூ.16,190) என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








