கொரோனா பேரில் வேகமாக பரவும் செர்பரஸ் வைரஸ்: எஸ்பிஐ விடுத்த எச்சரிக்கை!

|

COVID-19 தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கும் அப்டேட் என்ற பேரில் ஸ்மார்ட்போனில் செர்பரஸ் வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அதில் இருந்து வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலித்து வரும் நிலையில் இதை பயன்படுத்தி ஸ்மார்ட் போன் வைரஸ் ஒன்று பரவி வருகிறது. செர்பரஸ் எனப்படும் தீங்கிழைக்கும் புதுவகை வைரஸ் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய தகவல்களை திருடப்பயன்படுத்தப்படுகிறது.

ட்ரோஜன் வகை வைரஸ்

ட்ரோஜன் வகை வைரஸ்

ட்ரோஜன் வகை வைரஸ் என்று கூறப்படும் இந்த வைரஸானது கொரோனா தொற்று தொடர்பாக அப்டேட், விவரம் என முழுமையாக கொரோனா பெயரில் இந்த நாசவேலை நடைபெற்று வருகிறது. கொரோனா புதிப்பிப்பு தகவல்கள் போன்ற வழியில் லிங்காக அனுப்பப்படுகிறது. இந்த லிங்க் கிளிக் செய்த உடன் ஸ்மார்ட்போனில் தீங்கு வேலைகள் தொடங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய நிதி தரவுகள்

ஸ்மார்ட்போனில் உள்ள முக்கிய நிதி தரவுகள்

இந்த செர்பரஸ் வைரஸ் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான நிதி தரவுகளை பிரித்தெடுத்தப்பதோடு ஆன்லைன் பணம் பரிமாற்றம் போன்ற செயலிகள் மூலம் பணம் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று தொடர்பான தகவல்கள் அனுப்பவது போல் நமது மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. இதை கிளிக் செய்தவுடன், தங்களது மொபைலில் உள்ள மென்பொருள்கள் திருடப்படுகிறது.

சிபிஐ இன் இன்டர்போல் பிரிவு

சிபிஐ இன் இன்டர்போல் பிரிவு

சிபிஐ இன் இன்டர்போல் பிரிவு இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை அனுப்பியுள்ளது. தங்களது மொபைல் போனுக்கு தேவையில்லாமல் வரும் குறுஞ்செய்திகளையும், லிங்குகளையும் கிளிக் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

இந்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு செர்பரஸ் ட்ரோஜன் வைரஸ் குறித்து ஆலோசனை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரிய சலுகைகள் வழங்குவதாக கூறி எஸ்எம்எஸ், கோவிட் 19 தாக்குதல் குறித்து தகவல் எஸ்எம்எஸ் போன்றதன் வழியாக லிங்குகள் வரும் இதை பதிவிறக்குவது தங்களுக்கு தீங்கிழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்தும் தங்களை ஏமாற்றும் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ‘செர்பரஸ் எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளது.

செர்பரஸ் ட்ரோஜன் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு

செர்பரஸ் ட்ரோஜன் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு

எகனாமிக் டைம்ஸின் (ET) சமீபத்திய அறிக்கையின்படி, செர்பரஸ் ட்ரோஜன் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மாநிலங்களுக்கும் மத்திய நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. சிபிஐ எச்சரிக்கையின்படி, ட்ரோஜன் முதன்மையாக கிரெடிட் கார்டு எண்கள், சி.வி.வி மற்றும் பல வங்கி விவரங்களைத் திருடுவதில் கவனம் செலுத்துகிறது என தெரிவிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Beware of fake SMSs: SBI warns customer on Cerberus Trojan malware

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X