SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

|

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) இப்போது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறையை மாற்றியுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் படி, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கக் கட்டாயம் OTP சேவையைப் பயன்படுத்த வேண்டியதுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த பெரிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே கொஞ்சம் கவனியுங்க

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே கொஞ்சம் கவனியுங்க

இந்த விதி விரைவில் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று SBI தெரிவித்துள்ளது. இந்த விதி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பாகச் செயல்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. SBI வங்கியின் கூற்றுப்படி, வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் போது அந்த பரிவர்த்தனையைச் சரியாக முடிக்க, இனி OTP விபரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இனி OTP சரியாக போட்டால் தான் பணம் வருமா?

இனி OTP சரியாக போட்டால் தான் பணம் வருமா?

இதனால், ATM கார்டை பயன்படுத்தும் பயனர், சரியான பயனர் தான் என்பதை ATM உறுதிப்படுத்திக்கொள்ளும். OTP என்பது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட நான்கு இலக்க ஒன் டைம் பாஸ்வோர்ட் எண்ணாகும். இந்த OTP எண்கள் வங்கி வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும். இந்த OTP எண்கள் தான் இனி உங்களுடைய பணத்தை ATM-களில் இருந்து எடுக்க அங்கீகரிக்கப் போகிறது என்பதை மறக்காதீர்கள்.

IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?

எஸ்பிஐ கொண்டு வந்த புதிய ATM சேவை

எஸ்பிஐ கொண்டு வந்த புதிய ATM சேவை

இந்த எண்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும். தெரியாதவர்களுக்கு, OTP மூலம் பணம் வித்ட்ராவ் செய்யும் முறை ஜனவரி 1, 2020 முதல் தொடங்கியது. நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான எஸ்பிஐ, ஜனவரி 1, 2020 முதல் OTP அடிப்படையிலான வித்ட்ராவ் சேவையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த இப்போது நாட்டில் உள்ள அனைத்து ATM மையங்களிலும் இந்த சேவை கொண்டுவரப்பட்டுள்ளது.

ATM மோசடிகள் குறித்த விழிப்புணர்வு

ATM மோசடிகள் குறித்த விழிப்புணர்வு

SBI அவ்வப்போது சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் வழியாக ATM மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறது. அதேபோல், ஆன்லைன் பேங்கிங் தொடர்பான சில பாதுகாப்பு விதிமுறைகளையும் SBI தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களுக்காக பதிவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, SBI அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த OTP சேவையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

யாருக்கெல்லாம் இந்த OTP சேவை கட்டாயமானது?

யாருக்கெல்லாம் இந்த OTP சேவை கட்டாயமானது?

சரி, இப்போது யாருக்கெல்லாம் இந்த OTP சேவை கட்டாயமானது என்று பார்க்கலாம். எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ஒரே பணப் பரிமாற்றத்தில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை முடிக்க OTP தேவைப்படும். ATM-களில் பணம் எடுக்கும் நேரத்தில் இனி எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கைகொடுக்கும். அதிகரித்து வரும் மோசடி, சைபர் மோசடிகளில் இருந்து இந்த விதி உங்களைக் காப்பாற்றும் என்று வங்கி கூறியுள்ளது.

இனி ATM மையம் சென்றால் உங்கள் கையில் 'இது' கட்டாயம் இருக்க வேண்டும்

இனி ATM மையம் சென்றால் உங்கள் கையில் 'இது' கட்டாயம் இருக்க வேண்டும்

இனி SBI வங்கி வாடிக்கையாளர்கள், OTP சேவையை பயன்படுத்தி ATM மையங்களில் இருந்து பணத்தைப் பாதுகாப்பாக எடுத்துக்கொள்ளலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது. இனி, SBI வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க அருகில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் சென்றால், கட்டாயம் அவர்களின் கையில் வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் சாதனம் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இனி பணம் எடுக்கும்போது உங்களுடைய டெபிட் கார்டு மற்றும் மொபைல் போன் உங்களுடன் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Attention SBI customers ATM Cash Withdrawal Rules Changed With New OTP Service In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X