கூரையை பிச்சுட்டு வந்த லக்.! Apple ஸ்டோர்களில் வேலை வாய்ப்பு.! உடனே கிளம்புங்க.! அப்ளை பண்ணுங்க.!

|

உலகமெங்கும் தொழில்நுட்பத் துறையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம். பொதுவாகவே ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் தயாரிப்புகள் ரீடைல் ஷாப்புகளில் (Retail Shop) விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதையும் தாண்டி ஒரு சில நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்தியேகமான ஃப்ளாக் ஷிப் ஸ்டோர்களை (Flagship store) உருவாக்கி அதில் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனைக்கு வைப்பர்.

இந்தியாவில் பிளாக்ஷிப் ஸ்டோர் கடைகளை நிறுவும் ஆப்பிள்.!

இந்தியாவில் பிளாக்ஷிப் ஸ்டோர் கடைகளை நிறுவும் ஆப்பிள்.!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற பல உலக நாடுகளில் தன்னுடைய ஆப்பிள் ஃபிளாக் ஷிப் ஸ்டோரை (Apple Flagship Stores) ஆப்பிள் நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

அந்தப் பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர உள்ளது. ஆம், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய முதல் ஃபிளாக் ஷிப் ரீடைல் ஸ்டோரை (Apple Flagship Retails Stores India) வெகு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஆப்பிள் ஸ்டோர்களில் வேலையாட்கள் தேவை.!

ஆப்பிள் ஸ்டோர்களில் வேலையாட்கள் தேவை.!

இந்த ஃப்ளாக் ஷிப் ரீடைல் ஸ்டோர் மும்பையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டில் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள அந்த ஃப்ளாக் ஷிப் ரீடைல் ஸ்டோருக்கான ஆட்சேர்ப்பு தற்போது நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

குறைந்தபட்சம் 100 ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த ஆப்பிள் ஃப்ளாக் ஷிப் ரீடைல் ஸ்டோருக்கான ஆட்சேர்ப்பு படலத்தில் க்யூபெர்ட்டினோ டெக் (Cupertino-tech) நிறுவனம் இறங்கி உள்ளது.

உங்கள் போன் நீரில் விழுந்தால் உடனே எதை செய்ய வேண்டும்.! எதை செய்ய கூடாது.!உங்கள் போன் நீரில் விழுந்தால் உடனே எதை செய்ய வேண்டும்.! எதை செய்ய கூடாது.!

உடனே கிளம்புங்க.. இங்கே சென்று வேலைக்கு அப்ளை செய்யுங்க.!

உடனே கிளம்புங்க.. இங்கே சென்று வேலைக்கு அப்ளை செய்யுங்க.!

முதற்கட்டமாக 100 ஊழியர்களை வேலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிள் கரியர்ஸ் (Apple Careers) இணையதளத்தில் இந்தியாவில் உருவாக இருக்கும் ஃபிளாக் ஷிப் ரீடைல் ஸ்டோரிற்கான ஆட்கள் தேவை அறிக்கையும் இதை உறுதி செய்கிறது.

கடைத்தலைவர், நிபுணர், மூத்த மேலாளர், செயல்பாட்டு நிபுணர், சந்தை தலைவர், மேலாளர், உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படும் நிலையில், அதில் பல நிரப்பப்பட்டுள்ளதாகவும் பல காலியிடங்கள் இன்னும் இருப்பதாகவும் தெரிகிறது.

ஆப்பிள் ஸ்டோரில் வேலை செய்தால் என்ன நன்மை கிடைக்கும்?

ஆப்பிள் ஸ்டோரில் வேலை செய்தால் என்ன நன்மை கிடைக்கும்?

இந்த ஸ்டோரில் வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு பணியாளர் தள்ளுபடிகள், சுகாதார காப்பீடு, கல்வி ஆதரவு போன்ற பல பலன்களை ஆப்பிள் நிறுவனம் அளிக்க உள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஃப்ளாக் ஷிப் ரீடைல் ஸ்டோரை தாண்டி, டாடா நிறுவனம் ஆப்பிளுடன் சேர்ந்து 100 பிரத்தியேக ரீடைல் ஸ்டோர்களை ஆப்பிள் தயாரிப்புகளுக்காக உருவாக்கக் கைகோர்த்துள்ளது.

டாடா நிறுவனத்தின் இந்த ஸ்டோர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள மால்கள் மற்றும் புகழ்பெற்ற சந்தைகளில் நிறுவப்பட உள்ளது.

ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!ஒவ்வொரு WhatsApp சாட்-ஆ பாஸ்வோர்ட் போட்டு லாக் பண்ண முடியுமா? இப்படி செஞ்சா முடியும்.!

சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் வேகமாக வளரும் ஆப்பிள்.! இது தான் காரணமா?

சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் வேகமாக வளரும் ஆப்பிள்.! இது தான் காரணமா?

ஆப்பிள் நிறுவனத்திற்கு உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது என்பது நாம் அனைவரும் தெரிந்த விஷயம் தான்.

சென்ற மாதம் சீனாவில் நடந்த போராட்டம் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் பார்வை அடுத்து இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருவதை அடுத்து ஐபோன் தயாரிப்பிற்காக ஃபாக்ஸ்கான், பென்டகன், விஸ்ட்ரான் போன்ற உற்பத்தி நிறுவனங்களை சுமார் 41 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிறது.

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஆப்பிள்.! இந்தியாவில் எகிற போகிறதா லாபம்?

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட ஆப்பிள்.! இந்தியாவில் எகிற போகிறதா லாபம்?

தற்போது 5 சதவிகிதமாக இருக்கும் ஐபோன் தயாரிப்பு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஐபோன் தயாரிப்பைத் தாண்டி மேக்புக் (MacBook) மற்றும் ஐபாட் (iPad) தயாரிப்புகளையும் இந்தியாவில் அதிகரிக்கும்படி இந்திய அரசும் ஆப்பிள் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவர் ஹானர்.! எனக்கு நீதி வேண்டும்.! கோர்ட்டுக்கே நேரில் வழக்காட வந்த AI ரோபோட்.!யுவர் ஹானர்.! எனக்கு நீதி வேண்டும்.! கோர்ட்டுக்கே நேரில் வழக்காட வந்த AI ரோபோட்.!

யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க - உடனே அப்ளை பண்ணிடுங்க.!

யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க - உடனே அப்ளை பண்ணிடுங்க.!

இதனை அடுத்து மார்ச் மாதம் அறிமுகம் செய்யவிருக்கும் இந்த ஆப்பிள் ஃப்ளாக் ஷிப் ரீடைல் ஸ்டோர் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனையை இந்தியச் சந்தையில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்குள் வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் சிறப்பானது.

ஆப்பிள் தொடர்ந்து பல நகரங்களில் அதன் கடைகளை விரிவுபடுத்தவுள்ளதால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டால் லக் உங்களுடையது.

Best Mobiles in India

English summary
Apple Hiring Multiple People For Retail Stores and First Flagship Stores In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X