ஒரு கருவிக்கு 300% லாபம் பெறும் ஆப்பிள் நிறுவனம் : மக்களை ஏமாற்றுகிறதா??

Written By:

நம்மவர்கள் பெரும்பாலும் ஐபோன் பயன்படுத்த உண்மையான காரணம் தங்களது மதிப்பை உயர்த்தி காட்டுவது தான். இத்தகைய விலை கொண்ட ஐபோன் கருவியை வாங்க கடன் பெறுவது, இஎம்ஐ உள்ளிட்டவைகளை பயன்படுத்துவது, சிலர் ஐபோன் வாங்க தங்களது சிறுநீரகத்தை விற்பனை செய்யவும் அஞ்சுவதில்லை. இத்தனை சிரமத்திற்கு பின் ஐபோன் வாங்கி அதனை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் காத்திருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விலை

விலை

உண்மையில் ஐபோன் கருவியை தயாரிக்க எத்தனை பணம் செலவாகின்றது, ஒரு கருவியை விற்பனை செய்வதில் ஆப்பிள் நிறுவனம் எவ்வளவு லாபம் பெறுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா??

ஆய்வு

ஆய்வு

ஐபோன் 6 ப்ளஸ் கருவியை தயாரிக்க எவ்வளவு பணம் செலவாகும் என்பதை ஐஎச்எஸ் டெக்னாலஜி எனும் உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஐபோன் 6 ப்ளஸ் கருவியினை தயாரிக்க எவ்வளவு பணம் செலவாகும் என்பதை தெரிந்து கொண்டால் யாராக இருந்தாலும் அதிர்ச்சி நிச்சயமே.

லாபம்

லாபம்

உண்மையில் ஒரே ஒரு ஐபோன் 6 ப்ளஸ் கருவியை விற்பனை செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் சுமார் 300% லாபம் பெறுகின்றது.

கட்டணம்

கட்டணம்

இந்தியாவில் ரூ.51,000க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 6 ப்ளஸ் கருவியை தயாரிக்க சுமார் 17,000 மட்டும் தான் செலவாகின்றது.

பாகங்கள்

பாகங்கள்

ஐபோன் 6 ப்ளஸ் 16ஜிபி கருவியை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாகங்களுக்கு ரூ.15,800 மற்றும் இதன் தயாரிப்பு செலவுகளையும் சேர்த்தால் ரூ.17,000 மட்டும் தான் ஆகும்.

மதிப்பு

மதிப்பு

இதில் விலை உயர்ந்த பாகமாக இருப்பசு 3டி டச் தொழில்நுட்பம் தான், இதன் விலை மட்டும் ரூ.3,580.

கேமரா

கேமரா

இதை தொடர்ந்து கேமரா, ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமரா இரண்டிற்கும் சேர்த்து ரூ.1,530 வரை செலவாகின்றது.

மெமரி

மெமரி

ஆப்பிள் நிறுவனம் தனது கருவிகளுக்கு கூடுதல் மெமரி வழங்காததற்கு காரணம் இது தான். கருவியில் 1 ஜிபி வரை மெமரியை சேர்க்க ரூ.25க்கும் குறைவு தான்.

கட்டணம்

கட்டணம்

ஐபோன் 6 ப்ளஸ் 16ஜிபி மெமரியின் விலை ரூ.400, இதுவே 64 ஜிபி மெமரியின் விலை ரூ.1600. ஐபோன் 6 ப்ளஸ் 16ஜிபி மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் 64ஜிபி இரு மாடல்களுக்கும் இருக்கும் விலை வித்தியாசம் ரூ.1200க்கும் அதிகமாகாது. ஆனால் பயனர்கள் இரு மாடல்களுக்கும் ரூ.7000 வரை கூடுதலாக செலுத்துகின்றனர்.

கூலி

கூலி

இதில் சங்கடமான விஷயம் இதை தயாரிப்பவர்கள் வாங்கும் ஊதியம் தான். 24 மணி நேரம் வேலை செய்து ஒரு ஐபோன் கருவியை தயாரிக்கும் பணியாளர்கள் ரூ.120 மட்டுமே ஊதியமாக பெருகின்றனர்.

செலவு

செலவு

ஆப்பிள் நிறுவனம் ஆய்வு, பணியாளர் ஊதியம், போக்குவரத்து, உரிமம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்தாலும் கருவியில் அந்நிறுவனம் அதிக லாபம் பெறுகின்றது என்பதே உண்மை.

மதிப்பு

மதிப்பு

உலகளவில் ஆப்பிள் நிறுவன கருவிகளுக்கு மதிப்பு இருந்தாலும், இந்த மதிப்பிற்கு 300% லாபம் என்பதை நிச்சயம் அதிகம் தான்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Actual Cost Of Making An iPhone 6 Plus will shock you Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot