விவோ ஆட்டத்தை முடிக்க வந்த புதிய ஒப்போ 5ஜி போன்.. 7025mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை இப்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ அம்சங்கள் (OPPO Find X9s Pro specifications): 6.32-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 2640 x 1216 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9500 3nm SoC) சிப்செட் உடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
200எம்பி Samsung HPE மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 3.2எம்பி Multispectral லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ போனில் உள்ளன. குறிப்பாக விண்ட் ரைடர் கிரீன், ஃப்ரீ ஒயிட், வைப்ரண்ட் ஆரஞ்சு மற்றும் ஒரிஜினல் டைட்டானியம் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) போன்ற வசதிகள் உடன் இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது. அதேபோல் IP66 ரேட்டிங் + IP66 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த ஒப்போ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7025mAh பேட்டரி உடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி, வைஃபை 7, புளூடூத் 6.1, கலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடலின் விலை 5,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.72,670)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடலின் விலை 5,699 yuan (இந்திய மதிப்பில் ரூ.78,155)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடலின் விலை 5,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.82,270)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ மாடலின் விலை 6,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.95,980)
இந்த ஒப்போ போன் உடன் வரும் Hassleblad Teleconverter kit விலை 1,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.17,815)
வரும் ஏப்ரல் 24-ம் தேதி இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வரும். குறிப்பாகச் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ போன்களுக்கு போட்டியாக இந்த ஒப்போ போன் வெளிவந்துள்ளது


Click it and Unblock the Notifications








