Washing Machine இருக்கிறதா? அப்போ இந்த 7 தவறுகளை செய்யாதீங்க.! ஏனெனில்?

|

வாஷிங் மெஷின் தற்போது மக்களின் பிரதான பயன்பாடாக மாறி இருக்கிறது என்றே கூறலாம். அதாவது வாஷிங் மெஷின்கள் இல்லதா வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகி விட்டது. காரணம் இதன் தேவை மிகவும் அவசியமாகவும், அதிகமாகவும் இருப்பது தான்.

வாஷிங் மெஷின்

வாஷிங் மெஷின்

அதேபோல் மழைக் காலத்தில் வாஷிங் மெஷின் தேவை அளப்பரியதாக இருக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் நமது தினசரி வேலையைக் குறைக்கிறது இந்த வாஷிங் மெஷின். ஆனால் இந்த வாஷிங் மெஷின்-ஐ முறையாகப் பயன்படுத்த வேண்டும். இப்போது வாஷிங் மெஷின்-ல் பயன்படுத்தக் கூடாத பொருட்கள் என்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கல் பதித்த ஆடைகள்

கல் பதித்த ஆடைகள்

வாஷிங் மெஷினில் வேலைப்பாடுகள் நிறைந்த கைவினை ஆடைகள், பொருட்கள், கல் பதித்த ஆடைகள் போன்றவற்றைச் சுத்தம் செய்யக் கூடாது. குறிப்பாக கைவினை ஆடைகள் வாஷிங் மெஷின்-க்கு அதிக சிக்கல்களைக் கொண்டுவருகிறது என்றே கூறலாம்.

Android மற்றும் iPhone ஹேங் ஆகிவிட்டதா? ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யலாமா? இது நல்லதா? கெட்டதா?Android மற்றும் iPhone ஹேங் ஆகிவிட்டதா? ஃபோர்ஸ் ஷட் டவுன் செய்யலாமா? இது நல்லதா? கெட்டதா?

 சிறியதாக இருக்கும் ஆடைகள்

சிறியதாக இருக்கும் ஆடைகள்

அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் உள்ளாடைகளை இந்த வாஷிங் மெஷிங் றெக்கைகளில் சிக்கி, இயந்திரத்தில் செயல்பாட்டைத் தடுக்கலாம். எனவே சிறிய உள்ளாடைகளை வாஷிங் மெஷினில் சுத்தம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறிய உள்ளாடைகள் சலவை இயந்திரத்தின் உட்புறத்தைச் சேதப்படுத்தும்.

ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!ஒரு மேகத்துக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா? உண்மையை கட்டவிழ்த்த NASA ஜேம்ஸ் வெப்! மெய்சிலிர்த்த விஞ்ஞானிகள்!

சாவி, நாணயங்கள்

சாவி, நாணயங்கள்

நாம் தவறுதலாக ஆடையில் சாவி, நாணயங்கள் போன்ற உலோகங்களை வைத்து அப்படியே துவைக்கப் போட்டால், சலவை இயந்திரத்தின் செயல்பாட்டை அதிகமாகப் பாதிக்கும். எனவே இவற்றை முடிந்த அளவுக்குத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதேபோல் வாஷிங் மெஷினில் துணிகளைப் போடும் முன்பு அவற்றில் ஏதாவது இருக்கிறதா என்பதைக் கவனமான பார்க்க வேண்டும்.

கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!கோவை, திருச்சி, ஓசூர், மதுரையில் Airtel 5G அறிமுகம்! எந்தெந்த ஏரியாக்களில் கவரேஜ் கிடைக்கும்? இதோ லிஸ்ட்!

காலணிகள்

காலணிகள்

நாம் ஓட்டப்பயிற்சிக்குப் பயன்படுத்தும் ஆணி பதித்த காலணி மற்றும் லெதர் காலணிகளை வாஷிங் மெஷினில் சுத்தம் செய்யவதை தவிர்க்க வேண்டும். இவை இயந்திர செயல்பாட்டைப் பாதிக்கும். குறிப்பாக ஆணி பதித்த காலணி சலவை இயந்திரத்தில் அதிக பாதிப்பை ஏறப்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள்

சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள்

குறிப்பாக தின்னர், பெயின்ட் போன்ற தீப்பற்றக்கூடிய கறைகளைக் கொண்ட ஆடைகளைத் துவைத்து, ட்ரையரில் உலர வைக்க வேண்டாம். அப்படிச் செய்யும் பட்சத்தில் இதுபோன்ற கறைகளால் ஆடை மற்றும் இயந்திரத்திற்குச் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் ரெடியா இருங்க! பூமியை நெருங்கும் "விசித்திரமான" பச்சை நிற ஒளி.. சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

குழந்தைகளின் காலுறை

வாஷிங் மெஷனில் குழந்தைகளின் காலுறை, கீழ்-அடை போன்றவற்றைச் சுத்தம் செய்வதைத் தவிர்க்கலாம். அதாவது இவை அளவில் மிகவும் சிறியதாக இருக்கிறது. பின்பு இவை இயந்திரத்தினுள் சிக்கி செயல்பாட்டைப் பாதிக்கலாம்.

செல்லப்பிராணியின் ஆடை

செல்லப்பிராணியின் ஆடை

செல்ப்பிராணி பராமரிப்புக்குப் பயன்படுத்தும் அடைகளில் இருக்கும் முடிகள் சலவை இயந்திரத்திற்குள் சிக்கி அதன் செயல்பாட்டை அதிகமாகப் பாதிக்கலாம். அதேபோல் சலவை இயந்திரத்தில் அதிகப்படியான ஆடைகளை நிரப்புவதால் பாதிப்பு ஏற்படலாம். எனவே சலவை இயந்திரத்திற்குத் தகுந்த ஆடைகளைப் போட்டுத் துவைப்பது மிகவும் நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
7 Obvious Things You Should Never Put in the Washing Machine: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X