நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!

|

Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போனின் விற்பனையானது இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. இதன் அதிகாரப்பூர்வ விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த போனுக்கு ஆரம்பமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Redmi Note 12 Pro+

Redmi Note 12 Pro+

Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போனானது இன்றுமுதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை Flipkart அல்லது mi.com மூலம் வாங்கலாம்.

டாப் எண்ட் மாடல்

டாப் எண்ட் மாடல்

ரெட்மி நோட் 12 சீரிஸ் இல் மூன்று மாடல்கள் அறிமுகமாகி இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆனது டாப் எண்ட் மாடல் ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆரம்பமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Redmi Note 12 Pro+ விலை

Redmi Note 12 Pro+ விலை

Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போனில் இரண்டு வேரியண்ட்கள் இடம்பெற்றிருக்கிறது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.29,999 எனவும் டாப் எண்ட் வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.32,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது Mi.com, Flipkart.com, Mi Home மற்றும் Mi Studio உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

Redmi Note 12 Pro+ தள்ளுபடி விவரங்கள்

Redmi Note 12 Pro+ தள்ளுபடி விவரங்கள்

Redmi Note 12 Pro+ தள்ளுபடி விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ வங்கியின் கார்ட் மூலம் வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியின் மூலம் ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மாடலை ரூ.26,999 என வாங்கலாம். அதேபோல் 12 ஜிபி ரேம் மாடலை ரூ.29,999 எனவும் வாங்கலாம்.

பட்ஜெட் விலையில் வாங்க சரியான வாய்ப்பு

பட்ஜெட் விலையில் வாங்க சரியான வாய்ப்பு

Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. Xiaomi/ Mi மற்றும் Redmi ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனை ரூ.25,999 என வாங்கலாம்.

அதோடு மட்டுமின்றி பிளிப்கார்ட்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. நீங்கள் பரிமாற்ற விரும்பும் ஸ்மார்ட்போனின் தன்மைக்கு ஏற்ப எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படும். இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.

Redmi Note 12 Pro+ சிறப்பம்சங்கள்

Redmi Note 12 Pro+ சிறப்பம்சங்கள்

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் தள்ளுபடி குறித்த விவரத்தை தான் பார்த்தோம். இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

Redmi Note 12 Pro+ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டி ப்ளஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

இதில் 200 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆதரவுக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
200MP Camera Sensor Redmi Note 12 Pro+ Smartphone Sale Starts With Huge Discount.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X