1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!

|

மக்கள் 'அப்கிரேட்' ஆகிக்கொண்டே வருகிறார்கள். சும்மா சொல்லக்கூடாது? வெறுமனே செல்பீ கேமராவை மட்டுமே பார்த்து ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது.

இப்போதெல்லாம், ஒரு ஸ்மார்ட்போன் என்ன ப்ராசஸரை பேக் செய்கிறது? 5ஜி ஒருபக்கம் இருக்கட்டும், அது மொத்தம் எத்தனை பேண்ட்-களை சப்போர்ட் செய்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை ஆராய தொடங்கி உள்ளனர்.

இனியும் ஏமாற்ற முடியாது; புரிந்து கொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!

இனியும் ஏமாற்ற முடியாது; புரிந்து கொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!

மறுகையில் உள்ள ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும், தங்கள் வாடிக்கையாளர்களின் மத்தியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்றவாறு 'அப்கிரேட்' ஆகிக்கொண்டே வருகின்றன.

ஒரு ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரியை மட்டுமே வைப்பதால், குவாட் கேமராக்கள் என்கிற பெயரில் தேவையே இல்லாத 2 சென்சார்களை வைப்பதால் இனியும் பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்துணர்ந்து வருகின்றனர்.

அப்படியான ஒரு புரிதலில் உருவாகி உள்ளது தான், இந்த 1-இன்ச் கேமரா சென்சார்!

அப்படியான ஒரு புரிதலில் உருவாகி உள்ளது தான், இந்த 1-இன்ச் கேமரா சென்சார்!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி (Xiaomi) அடுத்த வாரம் அதன் சியோமி 12எஸ் சீரீஸை (Xiaomi 12S Series) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் இந்த புதிய பிளாக்ஷிப் சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதாவது சியோமி 12எஸ், சியோமி 12எஸ் ப்ரோ மற்றும் சியோமி 12எஸ் அல்ட்ரா ஆகியவைகள் வெளியாகலாம்.

இதற்கிடையில், இந்த சீரிஸின் ஹை-எண்ட் மாடல் ஆன சியோமி 12எஸ் அல்ட்ரா, ஒரு புதிய கேமரா சென்சார்-ஐ பயன்படுத்தும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அது சோனி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 1-இன்ச் சென்சார் ஆகும்.

இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!

1-இன்ச் சென்சார் என்றால் கேமரா குட்டியாக இருக்குமா?

1-இன்ச் சென்சார் என்றால் கேமரா குட்டியாக இருக்குமா?

1-இன்ச் சென்சார் என்றதும், இது ஸ்மார்ட்போனில் ஒரு குட்டியான கேமராவாக இடம்பெறும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உண்மையில், ஒரு 1-இன்ச் சென்சார் என்பது ஒரு ஸ்மார்ட்போனில் இடம்பெறும் மிகவும் பெரிய சென்சார் ஆகும்.

உங்களுக்கு புரியும்படி இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், 1-இன்ச் சென்சார் ஆனது Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா சென்சாரை விட 1.7 மடங்கு பெரியது ஆகும்

இத்தகைய சென்சார்-ஐ உருவாக்கி, அதை செயல்படுத்தி, அதை இந்தியாவில் பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன் - சியோமி 12S அல்ட்ரா ஆகும்

இனிமேல் சியோமி 12எஸ் அல்ட்ரா தான், பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்-ஆ!?

இனிமேல் சியோமி 12எஸ் அல்ட்ரா தான், பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்-ஆ!?

அப்படியும் சொல்லலாம். ஏனெனில் பெரிய சென்சார் என்றாலே அதிக வெளிச்சம் கிடைக்கும் என்று அர்த்தம். அதிக வெளிச்சத்தை கொடுத்தாலே அது சிறந்த கேமரா செயல்திறனையும் கொடுக்கும் என்று அர்த்தம்.

இன்னும் 'ஓப்பன்' ஆக சொல்லவேண்டும் என்றால், Sony IMX989 என்று அழைக்கப்படும் இந்த புதிய சென்சார், "கோட்பாட்டளவில்" ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபியை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் திறன் கொண்டது. ஆப்பிளின் ஐபோன்களை தூக்கி சாப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இருந்தாலும் கூட சோனியின் புதிய IMX989 சென்சார் ஆனது ஒரு கேமரா செட்டப்பில் எப்படி வேலை செய்யும்? எம்மாதிரியான அவுட்புட்-களை வழங்கும்? என்பது பற்றிய கூடுதல் தகவல்களை சியோமி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லைஎன்பதால், இப்போதைக்கு கொஞ்சம் "அடக்கி வாசிப்பதே" நல்லது!

Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!

சியோமி, சோனி, லைகா - மேஜிக் காட்டப்போகும் பார்ட்னர்ஷிப்?

சியோமி, சோனி, லைகா - மேஜிக் காட்டப்போகும் பார்ட்னர்ஷிப்?

சோனியின் IMX989-ஐ பேக் செய்யும் சியோமி 12S அல்ட்ரா உட்பட சியோமி 12எஸ் சீரீஸின் கீழ் அறிமுகமாகும் மூன்று மாடல்களின் கேமராக்களுமே, ஜெர்மன் நாட்டு கேமரா தயாரிப்பாளரான லைகா (Leica) உடன் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு முன் பல பிராண்டுகள் இப்படி கூட்டு சேர்ந்து கேமராக்களை உருவாக்கி உள்ளனர். ஆனால் அது பெரும்பாலும் ஒரு மார்க்கெட்டிங் வித்தையாகவே இருக்கும்.

அதே 'மேட்டர்' தான் இந்த ஸ்மார்ட்போன்களிலும் நடக்குமா அல்லது வேறு ஏதாவது 'மேஜிக்' நடக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய அறிமுகம் எப்போது?

இந்திய அறிமுகம் எப்போது?

சியோமி நிறுவனத்தின் 12எஸ் சீரீஸ் ஆனது வருகிற ஜூலை 4 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா? என்று நீங்கள் கேட்டால் - ஆம்! நிச்சயமாக அறிமுகமாகும் என்பதே எங்களின் பதிலாக இருக்கும்.

ஆனால் எப்போது வரும்? என்று கேட்டால், சரியாக தெரியாது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய அறிமுகம் மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இருப்பினும் 12எஸ் சீரீஸ், சீனாவில் அறிமுகமான சில மாதங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வர அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை அதே பெயரின் கீழ் வராவிட்டாலும் கூட வேறோரு புதிய பெயருடன் நிச்சயம் வரும்!

Photo Courtesy: Xiaomi

Best Mobiles in India

English summary
1-inch Camera Sensor SONY IMX989 Confirmed in Xiaomi 12S Ultra Why it is so important

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X