Tecno Phantom X2-வை இப்போ முன்பதிவு செய்தால்.. அடுத்த மாடலை இலவசமா வாங்கலாம்.!
சீனாவை சேர்ந்த முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ தன்னுடைய Tecno Phantom சீரிஸை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. டெக்னோ ஃபாண்டம் X2 (Tecno Phantom X2) மற்றும் டெக்னோ ஃபாண்டம் X2 ப்ரோ (Tecno Phantom X2 Pro) என்ற இரண்டு ஸ்மார்ட் போன் மாடல்களைக் கொண்டுள்ளது.

டெக்னோ ஃபாண்டம் X2 ஸ்மார்ட்போன் டிஸ்பிளே (Display)
டிஸ்ப்லே (Display)
இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் Full HD+ வளைந்த 6.8 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு (Corning Gorilla Glass Victus Protection) கொண்ட 120 Hz ரெப்ஃரெஷ் ரேட் (Refresh Rate) என்று அனைத்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது.

Tecno Phantom X2 போனின் கேமரா (Camera) அம்சம்
இந்த ஃபாண்டம் சீரிஸில் வரும் ஸ்மார்ட் போன்கள் மூன்று பின்பக்க கேமராக்கள் மற்றும் டுவல் LED ஃப்ளாஸ்களைக் (Dual LED Flash) கொண்ட ஒரு செல்ஃபி கேமராவுடன் வருகிறது. மூன்று பின்பக்க கேமராக்களில் ஒரு OIS கொண்ட 64MP முதன்மை கேமரா, 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் (Ultra-wide Lens) மற்றும் 2MP சென்சார் ஆகியவை அடக்கம். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களைப் பேசுவதற்கு 32MP கொண்ட முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா திரையில் மேலே நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அசத்தாலான போனின் மற்ற அம்சங்கள்
164.6 x 72.7 x 8.9 mm பரப்பளவும் 210 கிராம் எடையும் கொண்டுள்ள இந்த ஃபாண்டம் X2 ஸ்மார்ட் போன் மூன்லைட் சில்வர் (Moonlight Silver) மற்றும் ஸ்டார் டஸ்ட் க்ரே (Stardust Grey) என்று இரண்டு கலர் வேரியண்டுகளாகப் பளபளப்பான வெளிப்புற தோற்றத்துடன் வருகிறது.
மேலும் இதில் டுவல் சிம் (Dual-SIM), 5G, WiFi 6 802.11, Bluetooth 5.3, NFC, GPS, திரையின் உள்ளேயே கைரேகை ஸ்கானர் (inbuilt fingerprint scanner) ஆகிய அம்சங்களும் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகப் போனுடன் வீகன் லெதர் கேஸும் (Vegan Leather Case) கொடுக்கப்படவுள்ளது.

எப்படி செஞ்சா அடுத்த ஸ்மார்ட்போனை இலவசமா வாங்கலாம்?
இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை இன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பித்த, இந்த முன்பதிவில் டெக்னோ ஃபாண்டம் X2-வை பதிவு செய்தால் - ஃபாண்டம் X3 அறிமுகம் செய்யப்படும்போது இந்த X2 போனை இலவசமாக X3-க்கு மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற சலுகையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே இது வரை எந்த நிறுவனமும் வழங்காத டீல் தான்.


Click it and Unblock the Notifications








