3860எம்ஏஎச் பேட்டரியுடன் ரெட்மீ 5 : விலை மற்றும் அம்சங்கள் லீக்ஸ்.!

சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ 5ஏ சாதனத்தை மட்டுமின்றி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் சார்ந்த பணியிலும் ஈடுபட்டுள்ளது.

|

கடந்த சில நாட்களாக சியோமி நிறுவனத்தின் பிரபாலான கருவியான ரெட்மீ ஸ்மார்ட்போன் சார்ந்த விடயங்கள் தான் ஸ்மார்ட்போன் உலகின் அதிகம் பேசப்படும் தலைப்பாக உள்ளது. சமீபத்திய தகவலில் ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் சில்லறை பெட்டி புகைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து இப்போது, ரெட்மீ 4 வெற்றியது தொடர்ந்து வெளியாகவுள்ள ரெட்மீ 5 சார்ந்த அட்டகாசமான அப்டேட்ஸ்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான விபோ அறிக்கையொன்றின் கீழ், சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ 5ஏ சாதனத்தை மட்டுமின்றி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் சார்ந்த பணியிலும் ஈடுபட்டுள்ளதை வெளிப்படுத்தியது. தற்போது அக்கருவியின் விலை நிர்ணயம் மற்றும் அதன் ஐந்து முக்கியமான அம்சங்கள் சார்ந்த விடயங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்னாப்டிராகன்  630 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி

வெளியான தகவலில் இருண்டகு ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி அல்லது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம். இதன் முன்னோடி ஸ்னாப்டிராகன் 435எஸ்ஓசி கொண்டு இயங்கும் பட்சத்தில் இது ஒரு நல்ல முன்னேற்றம் என்றாலும், பேட்டரி திறன் வரவிருக்கும் மாதிரியில் குறைக்கப்படலாம்.

3680எம்ஏஎச் பேட்டரி

3680எம்ஏஎச் பேட்டரி

அதாவது ரெட்மீ 5 ஆனது ஒரு 3680எம்ஏஎச் பேட்டரியில் இருந்து சக்தியூட்டப்படுகின்றது ஆனால் இதன் முன்னோடிழியான ரெட்மீ 4 ஆனது 4100எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. எனினும், இதில் உள்ள நல்ல விடயம் என்னவென்றால் சிறிய பேட்டரி க்வால்காம் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தை வேகமாக சார்ஜ் செய்ய ஆதரிக்கும்.

வடிவமைப்பில் மாற்றம்

வடிவமைப்பில் மாற்றம்

மேலே காணப்படும் படத்திலிருந்து, சியோமி ரெட்மீ சாதனம் வளைந்த பக்கங்களுடன் ஒரு பிளாட் வடிவமைப்பு கொண்டு உருவாக்கம் பெற திட்டமிட்டிருக்க முடியும் என்பது தெளிவாகிறது. ஒருவேளை, வடிவமைப்பில் உள்ள மாற்றத்தை அடைய, பேட்டரி திறன் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இது ஸ்மார்ட்போனின் இறுதி வடிவமைப்பு அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

வேறுபட்ட மாதிரிகளில் வெளியாகலாம்

வேறுபட்ட மாதிரிகளில் வெளியாகலாம்

இதர குறிப்புக்கள் பற்றி பேசும் போது - ரெட்மீ 5 ஒரு 5 அங்குல எச்டி 720பி டிஸ்பிளே கொண்டு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது. ஸ்னாப்ட்ராகன் செயலி உடனான 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு விருப்பங்கள் போன்ற பல்வேறு ரேம் மற்றும் சேமிப்பு திறன் வேரியண்ட்களில் அறிமுகமாகலாம். மேலும் இந்த சாதனம் பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கலாம் மற்றும் பெட்டிக்கு வெளியே மியூஐ 9 (MIUI 9) உடன் வரலாம்.

சாத்தியமான விலை

சாத்தியமான விலை

ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் முக்கியமான அம்சங்கள் மட்டுமின்றி விலை விவரங்களும் லீக் ஆகியுள்ளன. அதன்படி ஸ்னாப்ட்ராகன் 625, 3 ஜிபி + 16 ஜிபி வேரியண்ட் சுமார் ரூ.8,000/- என்ற விலையில், அதே நேரத்தில் 3ஜிபி + 32ஜிபி சுமார் ரூ.10,000/- என்ற விலைக்கும் அறிமுகமாகலாம். 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாதிரிகள் முறையே சுமார் ரூ.10,500/- மற்றும் சுமார் ரூ.12,000/- என்ற புள்ளியில் விலை நிர்ணயம் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 key specs and price leak: MIUI 9, 3860mAh battery expected. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X