Home
Mobile

ரூ.3000 ஆபர் விலையில் SALE தெறிக்குது.. பேக் பேனல் டிஸ்பிளே, 90W சார்ஜிங், 6500mAh பேட்டரி IP64.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகவும், இன்பினிக்ஸ் நோட் 60 சீரீஸின் முதல் மாடலாகவும், இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ (Infinix Note 60 Pro) கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது இது ரூ.3000 ஆபர் விலையில் விற்பனையை தொடங்கியுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: முதல் மற்றும் கவனித்தக்க அம்சம் - இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோவின் பேக் பேனலில் உள்ள ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே தான். இது நோட்டிஃபிக்கேஷன் மற்றும் பிற தகவல்களை காண்பிப்பதற்காக பல எல்இடிக்களை கொண்டுள்ளது.

ரூ.3000 ஆபர் விலையில் SALE தெறிக்குது.. எந்த மாடல்?

இதோடு இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவும் உள்ளது. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை, இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் சிப்செட் (Octa core Snapdragon 7 series Chipset) உடன் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ மீதான அறிமுக சலுகைகள்: எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) பேங்க், யெஸ் (Yes) பேங்க், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஐடிஎப்சி (IDFC) பேங்க் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் 12 மாதங்கள் வரை வட்டியில்லா இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கிறது

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்போனை எங்கெல்லாம் வாங்கலாம்? இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்று (ஏப்ரல் 20) மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் இன்பினிக்ஸ் (Infinix) ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை டீப் ஓஷன் ப்ளூ, மோக்கா பிரவுன் மற்றும் சோலார் ஆரஞ்சு ஆகிய 3 கலர்களில் வாங்கலாம்.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.78-இன்ச் 1.5கே LTPS AMOLED டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 4500 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்
- 100 சதவிகிதம் DCI-P3 கலர் கேமட்

- 2,800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட்
- 2,304Hz வரையிலான PWM டிம்மிங்
- 93.18 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்

- 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 78-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆட்டோஃபோகஸ் வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.59) ப்ரைமரி கேமரா

- ஆட்டோஃபோகஸ் மற்றும் 111.4-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் (எப்/2.2) அல்ட்ராவைடு கேமரா
- 13-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 4K/30 fps வரையிலான வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 90W வயர்டு மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளைத் தாங்கும் IP64 ரேட்டிங்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான XOS 16 ஓஎஸ்
- டூயல் சிம் ஆதரவு

OPINION - இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கலாமா? முதல் பார்வையிலேயே இது - தனித்து நிற்பதில் வலுவான கவனம் செலுத்தும் ஒரு நம்பிக்கைக்குரிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக தெரிகிறது. இதன் அம்சங்கள் - அன்றாட பணிகள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு ஆகிய இரண்டு வகை பயனர்களுக்கு ஏற்றதாக உள்ளது. குறிப்பாக கேமிங் மற்றும் இன்டர்ஆக்டிவ் டிஸ்பிளே எக்ஸ்பீரியன்ஸில் (interactive display experience) ஆர்வமுள்ள பயனர்களுக்கு இது மிகவும் பொருத்தமான ஸ்மார்ட்போனாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro Sale Started With Rs 3000 Discount Price Check Out Specifications Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X