அவரே சொல்லிட்டாரு.. பிப்., 1 வருவது உறுதி! தரமான Samsung போன் வாங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

|

Samsung Galaxy S23 series ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வந்த நேரத்தில் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இன்னும் சிறிது காலம் மட்டும் காத்திருப்பது நல்லது.

பிப்.,1 வருவது உறுதி! தரமான Samsung போன் வாங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

Samsung Galaxy S23 series

Samsung Galaxy S23 series இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பாக சாம்சங் இணையதளத்தில் இதன் அன்பேக் செய்யப்படும் தேதியை உறுதி செய்திருக்கிறது. எஸ்23 சீரிஸ் விரைவில் வெளியாகும் என வதந்தி தகவல்கள் வெளியாகி வந்த நேரத்தில் புதிய சீரிஸ் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

வடிவமைப்பு குறித்த தகவல்

வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் எந்த வடிவமைப்பு குறித்த தகவலையும் நிறுவனம் பகிரவில்லை. ஆனால் வெளியாகி உள்ள டீசரில் மூன்று கேமராக்கள் காட்டப்பட்டிருக்கிறது. சாம்சங் இதன் வடிவமைப்பை முழுமையாக மறைத்திருந்தாலும், இதன் ரெண்டர்கள் இணையதளத்தில் பல முறை கசிந்திருக்கிறது. ரெண்டர்களுக்கும் அதிகாரப்பூர்வ வடிவமைப்புக்கும் பெரிய மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்23 மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா

SnoopyTech என்ற பெயரில் வெளியாகி உள்ள டிப்ஸ்டர் தகவலின்படி, கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் சாம்சங் கேலக்ஸி எஸ்23 மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஆகிய மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது காட்டன் ஃப்ளவர், மிஸ்ட்லி லிலாக், பொட்டானிக் க்ரீன் மற்றும் பாண்டம் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் பகிரவில்லை என்றாலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ஆன்லைனில் கசிந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 200 எம்பி முதன்மை கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள இரண்டு மாடல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது TSMC ஆல் 4nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்23 குறித்து வெளியான தகவல்

வழக்கமான ரேம் மாடல்கள் இதில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கேலக்ஸி எஸ் 23 ஸ்மார்ட்போனின் ரேம் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கிறது. இதன் முந்தைய மாடல் ஆன கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்றே 8 ஜிபி ரேம் ஆதரவு இதிலும் இடம்பெறலாம் என கணிக்கப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி எஸ்23 மாடலில் 128 ஜிபி வேரியண்ட் உடன் 1டிபி மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்கப்படலாம்.

பிப்.,1 வருவது உறுதி! தரமான Samsung போன் வாங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

முந்தைய மாடல்களை விட கேலக்ஸி எஸ் 23 போனில் மேம்பட்ட பேட்டரி ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முந்தைய மாடலான கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Samsung கேலக்ஸி ஏ14 மற்றும் ஏ23

அதேபோல் Samsung கேலக்ஸி ஏ14 மற்றும் ஏ23 ஸ்மார்ட்போன்களை இந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கேலக்ஸி ஏ14 போனானது ரூ.15,000 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் Samsung Galaxy A14 மற்றும் A23 5G ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி

சாம்சங் இந்தியாவில் இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜனவரி நடுப்பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Xiaomi அதன் Redmi Note 12 தொடரின் கீழ் மூன்று நடுத்தர பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்த இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. சாம்சங் Galaxy A14 மற்றும் A23 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் Dimensity 700 SoC மூலம் இயக்கப்படலாம். ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதை கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Wait for a while to buy a good phone: Samsung Galaxy S23 series Launching Date Confirmed by Samsung!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X