தரமான சிப்செட் வேணுமா இருக்கு, அருமையான கேமரா வேணுமா இருக்கு - ரெடியா இருங்க வருது புதிய Samsung போன்.!

|

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம் துவக்கத்தில் இந்தியாவில் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23

சாம்சங் கேலக்ஸி எஸ்23

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா, மிகவும் மெலிதான வடிவமைப்பு, தரமான டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

டிவி ரிமோட்க்கு பேட்டரி மாத்துறீங்களா? இந்த ட்ரிக் தெரிஞ்சா உங்க டிவிக்கு ரிமோட்டே தேவையில்லை.!டிவி ரிமோட்க்கு பேட்டரி மாத்துறீங்களா? இந்த ட்ரிக் தெரிஞ்சா உங்க டிவிக்கு ரிமோட்டே தேவையில்லை.!

சாம்சங் கேலக்ஸி எஸ்23 நிறங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 நிறங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் ஆனது பாண்டம் பிளாக், காட்டன் ஃப்ளவர், பொட்டானிக் கிரீன் மற்றும் Mystic Lilac உள்ளிட்ட நிறங்களில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

மனச கல்லாக்கிகோங்க.. 5G-க்காக செய்த செலவை சமாளிக்க Jio, Airtel திட்டங்களின் மீது கட்டண உயர்வு! இனிமேல்?மனச கல்லாக்கிகோங்க.. 5G-க்காக செய்த செலவை சமாளிக்க Jio, Airtel திட்டங்களின் மீது கட்டண உயர்வு! இனிமேல்?

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும். எனவே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்: பட்ஜெட் விலை போனின் படத்தை லீக் செய்த OnePlus.!வாங்க வாங்க உங்களுக்காகத் தான் வெயிட்டிங்: பட்ஜெட் விலை போனின் படத்தை லீக் செய்த OnePlus.!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இப்போது சமீபத்தில் அறிமுகமான சில பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் இதே சிப்செட் வசதி தான் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு நற்செய்தி: பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது YouTube.! எப்போது முதல்?ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்கு நற்செய்தி: பணத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது YouTube.! எப்போது முதல்?

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடீயாகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!நம்பலனாலும் இதான் நிஜம்! 200MP கேமரா கொண்ட Redmi Note 12 Pro+ போனை பட்ஜெட் விலையில் வாங்கலாம்.!

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு

சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கூட உள்ளது. அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?இரவோடு இரவாக.. மதுரை, ஓசூர் உட்பட 6 முக்கிய மாவட்டங்களில் Jio 5G அறிமுகம்! இந்த பட்டியலில் உங்கள் ஊர் உள்ளதா?

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: 91mobiles.com, Winfuture.de, @onleaksXDigit.in

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S23 smartphone image and features leaked online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X