பட்ஜெட் விலையில் ஒரு Samsung போன் வேண்டுமா? அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வருது அட்டகாசமான போன்.!

|

ரெட்மி, ஒப்போ, விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் தரமான அம்சங்களுடன் தான் வெளிவந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ04

சாம்சங் கேலக்ஸி ஏ04

அந்த வரிசையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். அதாவது சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ04 (Galaxy A04)ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Airtel அறிமுகம் செய்த Airtel அறிமுகம் செய்த "ஸ்மார்ட் ரீசார்ஜ் திட்டம்": ரூ.109 முதல் ரூ.131 வரை மொத்தம் 4 திட்டங்கள்!

பேட்டரி வேற லெவல்

பேட்டரி வேற லெவல்

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனின் மாடல் எண் SM-A045M என்று அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) மூலம் தெரியவந்துள்ளது. பின்பு இந்த புதிய ஸ்மார்ட்போன் 4900 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

ஒன்னு இல்ல ரெண்டு இருக்கு: ஒல்லியான தேகம் வலுவான அம்சத்தோடு Xiaomi Book Pro 2022!ஒன்னு இல்ல ரெண்டு இருக்கு: ஒல்லியான தேகம் வலுவான அம்சத்தோடு Xiaomi Book Pro 2022!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் ஆனது 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும். பின்பு டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கலாமா? OnePlus Nord 2T இன்று முதல் விற்பனை.. சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்?ஆரம்பிக்கலாமா? OnePlus Nord 2T இன்று முதல் விற்பனை.. சலுகையுடன் எங்கிருந்து வாங்கலாம்?

மென்பொருள் வசதி

மென்பொருள் வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த கேலக்ஸி ஏ04 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ04 முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் என்றும், அதன்பின்பு மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Apple ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் விலை என்ன?- காத்திருந்து வாங்கலாமா, பட்ஜெட் தாங்குமா?Apple ஐபோன் 14 ப்ரோ, 14 ப்ரோ மேக்ஸ் விலை என்ன?- காத்திருந்து வாங்கலாமா, பட்ஜெட் தாங்குமா?

 சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720×1,600 பிக்சல்ஸ், 20:9 ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் UNISOC T606 பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

Microsoft இந்தியாவில் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்: அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.!Microsoft இந்தியாவில் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்: அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.!

 சாம்சங் கேலக்ஸி ஏ03 கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ03 கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் இந்த போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?

என்ன விலை?

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனி ஆரம்ப விலை ரூ.10,499-ஆக உள்ளது. மேலும் சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A04 Smartphone to launch soon with 5100 mAh battery: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X