Home
Mobile

iPhone 17, Galaxy S26-லாம் ஓரம்போ.. எல்லோரும் வாங்கும் விலைக்கு Telephoto Extender Kit உடனான புது VIVO போன்!

விவோ (VIVO) நிறுவனத்தின் மேலும் ஒரு எப்இ (FE) ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் தான் இந்நிறுவனம் அதன் விவோ வி70 எப்இ 5ஜி (Vivo V70 FE 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது.

இப்போது விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) மாடலும் இந்திய சந்தைக்கு வரவுள்ளது போல் தெரிகிறது. இது கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் "யாருக்கும் தெரியாமல்" சைலன்ட் ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இது விரைவில் இந்திய சந்தைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லோரும் வாங்கும் விலை, Telephoto Extender Kit உடனான புது VIVO போன்!

இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த போனுடன் டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் எனப்படும் ஒரு கூடுதல் கேமரா ஆக்சஸெரீயும் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது கடந்த டிசம்பர் 2025 இல் ஒரு ப்ரோ வேரியன்ட்டுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்300 மாடலுக்குக் கீழே நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி 91மொபைல்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது "தனியாக விற்கப்படும்" ஸெய்ஸ் (Zeiss) டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும்.

இந்த கேமரா ஆக்சஸெரீ ஆனது, ஒரு பிரத்யேக கேஸை பயன்படுத்தி ஸ்மார்ட்போனின் டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைக்கப்பட்டு, ஜூம் திறனை 2.35x வரை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது பயனர்கள் - 200மிமீ ஆப்டிகல் ஜூம் வரை செல்லவும் மற்றும் அதிகபட்சமாக 1600மிமீ ஃபோக்கல் லென்த்தை அடையவும் உதவும்.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ்300 எப்இ மாடலில் ஸெய்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் கூடிய 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம், மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ-ஆல் இயங்கும் போர்ட்ரெய்ட் மோட்கள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை எக்ஸ்டெண்டர் கிட் உடன் பயன்படுத்தும்போது, ​​போர்ட்ரெய்ட் புகைப்பட செயல்திறன் இன்னும் மேம்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும், இந்தியாவில் தற்போது சுமார் ரூ.75,000 விலையில் உள்ள விவோ எக்ஸ்300 மாடலுக்கு கீழே, விவோ நிறுவனம் அதன் எக்ஸ்300 எப்இ மாடலை நிலைநிறுத்தக்கூடும். அதாவது இந்த விலை ஐபோன் 17 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 உடன் போட்டியிடும்படி இருக்கும்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: இந்தியாவில் விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது. அடுத்ததாக உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.40,999 மற்றும் ரூ.44,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K (2800×1260 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே
- 12GB வரையிலான LPDDR5 ரேம் உடனான 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7360-டர்போ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 6

- எப்/1.88 அபெர்ச்சர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- எப்/2.2 அபெர்ச்சர், 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆரா லைட் ஆதரவுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவு
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- 7,000mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 FE With Telephoto Extender Kit Launching Soon in India Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X