இந்த வாரம் இறுதியில் தரமான சம்பவம் செய்யும் Redmi: இப்படி ஒரு 5G போனுக்காக தான் வெயிட்டிங்.!

|

ரெட்மி நிறுவனம் இந்த வாரம் இறுதியில் ரெட்மி ஒரு தரமான சம்பவத்தைச் செய்யப் போகிறது என்றே கூறலாம். அதாவது ரெட்மி நிறுவனம் வரும் ஜனவரி 5-ம் தேதி புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே மற்றும் சிப்செட்

ரெட்மி நோட் 12 ப்ரோ ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த வாரம் இறுதியில் தரமான சம்பவம் செய்யும் Redmi.!

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 2400 X 1080 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனில் Dimensity 1080 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தி உதவுகிறது இந்த Dimensity 1080 சிப்செட். குறிப்பாக மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் இந்த ரெட்மி போன்.

தனித்துவமான கேமரா

புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 50 எம்பி (சோனி ஐஎம்எக்ஸ் 766) மெயின் கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

இந்த வாரம் இறுதியில் தரமான சம்பவம் செய்யும் Redmi.!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி எலடிஇ, வைஃபை 6, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கான ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi Note 12 Pro 5G smartphone will be launched in India this weekend: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X