சத்தமின்றி கம்மி விலையில் அறிமுகமான Redmi 10A Sport.! ஆளுக்கொரு போன் பார்சல்.!

|

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து கம்மி விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய ரெட்மி 10ஏ ஸ்போர்ட் (Redmi 10A Sport) எனும் ஸ்மார்ட்போனை கம்மி விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம்.

 ரெட்மி 10ஏ ஸ்போர்ட்

ரெட்மி 10ஏ ஸ்போர்ட்

மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பெரிய டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன். மேலும் இப்போது புதிய ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6 லட்சம் Aadhaar எண்கள் ரத்து: உங்களது ஆதாரின் நிலையை தெரிந்துகொள்ள 6 லட்சம் Aadhaar எண்கள் ரத்து: உங்களது ஆதாரின் நிலையை தெரிந்துகொள்ள "இங்கே" சரிபார்க்கவும்.!

எச்டி பிளஸ் டிஸ்பிளே

எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் வாட்டர்-டிராப் நாட்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல்ஸ், 20:9 ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி
ஸ்மார்ட்போன்.

Flipkart Big Saving Days Sale 2022: அட்டகாச தள்ளுபடி- நீங்க மிஸ் பண்ணவே கூடாத சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!Flipkart Big Saving Days Sale 2022: அட்டகாச தள்ளுபடி- நீங்க மிஸ் பண்ணவே கூடாத சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது மீடியாடெக் ஹீலியோ ஜி25 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் உதவியுடன் ஆப்ஸ்களை
தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10ஏ ஸ்போர்ட்
ஸ்மார்ட்போன்.

50எம்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!50எம்பி கேமரா, 6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் புதிய மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு உள்ளது.

காசு கொடுத்துறோம் வாட்ச்சை திரும்ப கொடுங்க- விற்பனை செய்த 17 லட்சம் வாட்ச்களை திரும்பப் பெறும் ஃபிட்பிட்!காசு கொடுத்துறோம் வாட்ச்சை திரும்ப கொடுங்க- விற்பனை செய்த 17 லட்சம் வாட்ச்களை திரும்பப் பெறும் ஃபிட்பிட்!

 13எம்பி ரியர் கேமரா

13எம்பி ரியர் கேமரா

இந்த ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 13எம்பி ரியர் கேமரா (f2.2 aperture) ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.

இனி துடைப்பத்தில் உட்கார்ந்து பறங்க., ராக்கெட் எஞ்சின் எல்லாம் விற்க மாட்டோம்- அமெரிக்காவை கேலி செய்யும் ரஷ்யாஇனி துடைப்பத்தில் உட்கார்ந்து பறங்க., ராக்கெட் எஞ்சின் எல்லாம் விற்க மாட்டோம்- அமெரிக்காவை கேலி செய்யும் ரஷ்யா

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

புதிய ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும். பின்பு 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான
ரெட்மி ஸ்மார்ட்போன்.

வாட்ஸ்அப் பயனர்களே தயாரா?- இனி எல்லாம் அனிமேஷன் மெசேஜ் தான்: விரைவில் வரும் அனிமேஷன் ரியாக்ஷன் அம்சம்!வாட்ஸ்அப் பயனர்களே தயாரா?- இனி எல்லாம் அனிமேஷன் மெசேஜ் தான்: விரைவில் வரும் அனிமேஷன் ரியாக்ஷன் அம்சம்!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 194 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் விலை

ரெட்மி 10ஏ ஸ்போர்ட் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி 10ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் இந்த புதிய போன் சார்கோல் பிளாக், ஸ்லேட் கிரே மற்றும் சீ ப்ளூ நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தஸ்மார்ட்போனை MI ஸ்டோர் மற்றும் அமேசான் இந்தியா தளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தகக்து.

இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் ரெட்மி நிறுவனமும் தொடர்ந்து சூப்பரான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.

 ரெட்மி பட்ஸ் 3 லைட்

ரெட்மி பட்ஸ் 3 லைட்

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட் எனும் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம். இந்த இயர்பட்ஸ் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடலில் 6எம்.எம் டிரைவர்கள் இடம்பெற்று உள்ளன. எனவே இது ஒரு தனித்துவமான ஆடியோ அனுபவத்தை உங்களுக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோவை போன்ற தோற்றமுடைய சார்ஜிங் கேஸும் இதனுடன் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி பட்ஸ் 3 லைட் விலை

ரெட்மி பட்ஸ் 3 லைட் விலை

குறிப்பாக புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸின் விலை ரூ.1,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி பட்ஸ் 3 லைட் மாடல் ஆனது வரும் ஜூலை 31-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விற்பனைக்கு வந்த இரண்டு நாட்களுக்குள் இந்த இயர்பட்ஸ் வாங்கினால் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi 10A Sport launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X