புது போன் தேடுறீங்களா? இந்த 5 போன்களையும் கண்ணை மூடிட்டு வாங்கலாம்! ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ!

|

ஒரு ஸ்மார்ட்போனிற்காக அதிக பணம் செலவு செய்தால் தான் பிளாக்ஷிப் / பிரீமியம் அம்சங்கள் கிடைக்கும் என்கிற எந்த அவசியமும் இல்லை.

ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ், சிறந்த போட்டோ குவாலிட்டி, நீண்ட பேட்டரி லைஃப், பிரீமியம் டிசைன் மற்றும் நல்ல பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஒரு ஸ்மார்ட்போனை தேர்வு செய்தாலே போதும்.

அப்படியாக நாங்கள் தேர்வு செய்த டாப் 5 பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் (Best Smartphones) பட்டியலும்.. இந்த 5 போன்களையும் ஏன் கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம் என்கிற காரணங்களும் இதோ:

01. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro Plus)

01. ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro Plus)

ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி 10 ப்ரோ பிளஸில் (Realme 10 Pro Plus) உள்ள பிரீமியம் கர்வ்டு டிசைன் மற்றும் இதன் 5ஜி ஆதரவிற்காகவே - இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

இது 6.7-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட், 108MP + 8 MP அல்ட்ராவைடு லென்ஸ் + 2MP மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

இது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரியல்மி 10 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலை ஆகும்!

ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

02. ஒப்போ எப்21 ப்ரோ (Oppo F21 Pro)

02. ஒப்போ எப்21 ப்ரோ (Oppo F21 Pro)

ஒப்போவின் பெஸ்ட் கேமரா போன்களில் ஒன்று என்பதாலாயே இதை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். ஒப்போ எப்21 ப்ரோ மாடல், தற்போது பிளிப்கார்ட் வழியாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இது 2MP டெப்த் மற்றும் 2MP மைக்ரோஸ்கோபிக் சென்சார் உடனான 64MP மேட்டின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை வழங்குகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 32MP செல்பீ கேமராவுடன் வருகிறது. மேலும் இது 6.43-இன்ச் அளவிலான டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டையும் கொண்டுள்ளது.

03. மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30)

03. மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30)

இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,999 ஆகும். ஸ்டாக் ஆண்ட்ராய்டுடன் வரும் ஒரே ஒரு காரணத்திற்காகவே இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

மேலும் இது 50MP + 50MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 32MP செல்பீ கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் சிப்செட் போன்ற அம்சங்களையும் வழங்கும்.

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

04. சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G)

04. சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G)

நீங்கள் ஒரு ஆல்-ரவுண்டர் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

ஏனென்றால், இது பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் ஆதரவுடன் 108MP மெயின் கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் இரண்டு 2MP டெப்த் மற்றும் மேக்ரோ சென்சார்களுடன் வருகிறது. 5ஜி ஆதரவை வழங்க மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப்செட்டை பேக் செய்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ. 23,999 ஆகும்.

05. நத்திங் போன் 1 (Nothing Phone 1)

05. நத்திங் போன் 1 (Nothing Phone 1)

இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ஸ்மார்ட்போன் - நத்திங் போன் 1 ஆகும்; இதன் தற்போதைய விலை ரூ.25,999 ஆகும். இது முழுக்க முழுக்க, ஒரு வித்தியாசமான மற்றும் ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கான ஒரு விருப்பம் ஆகும்.

இது டிரான்ஸ்பரென்ட் டிசைன், GLYMPH லைட்ஸ், ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்றவைகளை கொண்டுள்ளது. இதை ஒரு பெஸ்ட் ஸ்மார்ட்போன் என்று கூறிவிட முடியாது. அதே சமயம் டாப் 5 பட்டயலில் இருந்து நீக்கவும் முடியாது!

Best Mobiles in India

English summary
Planning To Buy New Phone Under Rs 25000 Then You Should Miss This 5 Best Smartphones in India 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X