அடுத்த மாசம் புது போன் வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.! மிரட்டல் வருகை.!

|

சில ஸ்மார்ட்போன்களை பார்த்தவுடன் நமது கண்களை அந்த டிவைஸை கவர்ந்துவிடும். பார்த்தவுடன்.. அடடா.! இப்படி ஒரு போனை தான் வாங்கணும் என்ற எண்ணம் தோன்றிவிடும். ஒவ்வொருவருக்கும் இது போன்ற எண்ணம் மாடலுக்கு மாடல் வேறுபாடும். ஆனால், இங்கோ ஒரு ஸ்மார்ட்போன் டிவைஸை பார்த்தவுடன் அனைவருக்கும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது.

Oppo Reno 8T 5G இந்தியாவுக்கு வர ரெடி.!
அது தான் ஒப்போ (Oppo ) நிறுவனத்தால் விரைவில் அறிமுகமாகவிருக்கும் ஒப்போ ரெனோ 8T 5G (Oppo Reno 8T 5G) ஸ்மார்ட்போன் சாதனமாகும். சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OPPO இந்தியாவில் அதன் பிரபலமான ரெனோ தொடரிலிருந்து இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாசம் புது போன் வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.!

இந்தியாவில் 2 போனா இல்லை ஒரே போனா?
MySmartPrice இன் அறிக்கையின்படி, நிறுவனம் OPPO Reno 8T 5G டிவைஸ் வரும் மாதத்தில் இந்தியாவில் வெளியிட்ட தயாராக உள்ளது. முன்னதாக, ஸ்மார்ட்போன் OPPO F23 5G என மறுபெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது, ​​இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் தனித்தனியாக வெளியிடப்படும் என்று அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

OPPO Reno 8T 5G இந்தியா அறிமுகம் எப்போது?
OPPO Reno 8T 5G இந்தியாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இருப்பினும், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவை மேற்கோள் காட்டி சரியான வெளியீட்டு தேதி எதுவும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. பெரும்பாலும் இந்த டிவைஸ் பிப்ரவரி மதத்தின் நடுப்பகுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் OPPO Reno 8T 5G விலை, ரேம் மற்றும் சேமிப்பு
இது ஒரு 5ஜி சாதனம் என்பதனால், இந்த புதிய OPPO Reno 8T 5G சாதனத்தின் விலை ரூ. 32,000 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த புது Oppo Reno 8T 5G வரவிருக்கும் ஸ்மார்ட்போன் இந்தியாவில் குறைந்தது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார். இத்துடன் கூடுதல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாசம் புது போன் வாங்குனா இந்த போனை தான் வாங்கணும்.!

OPPO Reno 8T 5G சிறப்பம்சம்
OPPO Reno 8T 5G ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் 6.67' இன்ச் OLED 10 பிட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 108 MP பிரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் டூயல் 2 MP சென்சார்கள் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் என்றும் லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ G99 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது OPPO Reno 8T 4G என்று அழைக்கப்படலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும். இதன் விலை ரூ. 20,000 முதல் ரூ.25,000 விலைக்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புது போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலோ அல்லது அருமையான ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்ற ஐடியா இருந்தாலோ அடுத்த மாதம் வரை வெயிட் செய்து இந்த போனை வாங்குங்கள்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 8T 5G Budget Mobile Price In India and Launch Details Got Leaked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X