ஓப்போ கே7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமா?- லீக்கான தகவல்!

|

ஓப்போ கே 5 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஓப்போ கே7 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓப்போ கே 5 ஸ்மார்ட்போன்

ஓப்போ கே 5 ஸ்மார்ட்போன்

ஓப்போ கே 5 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாரிசான முதல் மாடல் போன் தயாரிப்புக்கான பணியில் நிறுவனம் பணி புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஓப்போ கே 7 5ஜி என பெயரிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

ஓப்போ கே 7 5ஜியின் விவரக்குறிப்புகள்

ஓப்போ கே 7 5ஜியின் விவரக்குறிப்புகள்

ஓப்போ கே 7 5ஜியின் விவரக்குறிப்புகள் டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை நிலையம் மற்றும் டுவிட்டரில் கசிந்துள்ளது. இதில் வெளியான தகவலின்படி ஓப்போ 7 5ஜி 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் வருகிறது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம்- ஆரம்ப விலை இதுதான்!வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி: ஜியோ குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம்- ஆரம்ப விலை இதுதான்!

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு 4025 எம்ஏஹெச் பேட்டரி வசதியோடு இருக்கிறது. கைரேகை சென்சார் குறித்து எந்த தகவலும் இல்லை. கூடுதல் விவரக்குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

ஓப்போ கே 5 விவரக்குறிப்புகள்

ஓப்போ கே 5 விவரக்குறிப்புகள்

ஓப்போ கே 5 வாரிசாக இந்த போன் வெளிவருகிறது என்பதால் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். 6.4 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கைரேகை சென்சார் இருக்கிறது.

4000 எம்ஏஹெச் பேட்டரி

4000 எம்ஏஹெச் பேட்டரி

ஓப்போ கே 5 விவரக்குறிப்புகள் குறித்து மேலும் பார்க்கையில் கலர் ஓஎஸ் 6.1, ஆண்ட்ராய்டு 9 பை மூலம் இயங்குகிறது. மேலும் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 30 வாட்ஸ் வூக் 4.0 ஃப்ளாஷ் சார்ஜ் கொண்டது. ஓப்போ கே5 2.2 ஜிகா ஹெட்ஸ் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 730 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா ஆதரவோடு, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி ஆழ சென்சார் கேமரா வசதி கொண்டுள்ளது. மேலும் செல்பி கேமரா வசதியை பொருத்தவரையில் 32 எம்பி ஆதரவு உள்ளது.

உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!உலகின் முதல் AR வெளியீட்டு நிகழ்வில் OnePlus நோர்ட் ஜூலை 21 தேதி அறிமுகம்!

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

ஓப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஓப்போ ரெனோ 4 ப்ரோ 5 ஜி 6.5533 அஹ்குல முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo k7 5G smartphone may launching soon specification leaked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X