இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒப்போ நிறுவனம் OPPO Find N2 Flip எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

எப்போது அறிமுகம்?

அதாவது அடுத்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள Mobile World Congress 2023 நிகழ்ச்சியில் இந்த புதிய ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனை அறிமுகம் செய்ய உள்ளது ஒப்போ நிறுவனம். ஆனால் அறிமுகத்திற்கு முன்பே இந்த போனின் சில முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் தெரியவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?

டிஸ்பிளே அம்சங்கள்

விரைவில் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 6.8-இன்ச் AMOLED ஃபோல்டிங் டிஸ்ப்ளே வசதி உள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ போன். பின்பு இந்த போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 3.26 இன்ச் அளவில் கவர் டிஸ்ப்ளே வசதி கூட உள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

பாதுகாப்பு வசதி?

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். பின்பு அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ பிளிப் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக சாம்சங் பிளிப் போன்களை விட இந்த ஒப்போ போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அசத்தலான கேமரா

குறிப்பாக இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒப்போ போன்.

அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?

தரமான சிப்செட்

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சக்திவாய்ந்த மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்தஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை வேகமாக இயக்க பயன்படுத்த இந்த Dimensity 9000+ சிப்செட்.

நிறங்கள்?

இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பிளாக் மற்றும் பர்பில் நிறங்களில் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.

அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?

பேட்டரி எப்படி?

4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன். ஆனால் இதற்குப் பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும். பின்பு 40 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல்.

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போனின் விலை?

அதேபோல் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். பின்பு இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், இந்த போனில் பேட்டரியை தவிர மற்ற அனைத்து அம்சங்களும் மிகவும் அருமையாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OPPO Find N2 Flip Phone will be launched at the end of next month: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X