கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விரைவில் இந்தியாவுக்கு வரும் Oppo Find N2 Flip!

|

Oppo நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான Oppo Find N2 Flip ஐ விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்தில் தாய்லாந்தின் NBTC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாடு கீக்பெஞ்ச் தளத்தில் தோன்றி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் புள்ளிவிவரங்கள் குறித்த முக்கிய விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விரைவில் இந்தியாவுக்கு வரும் Oppo FindN2 Flip

மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட்

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது சிங்கிள் கோர் சோதனையில் 906 மதிப்பெண்களையும் கீக்பெஞ்ச் இன் மல்டி கோர் சோதனையில் 3132 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கபபடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மூலம் இது இயக்கப்படும் என கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது 3.26 இன்ச் பெரிய ஓஎல்இடி கவர் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இதன் முக்கிய டிஸ்ப்ளே முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த முக்கிய டிஸ்ப்ளே ஆனது 6.8-இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4என்எம் ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Oppo Find N2 Flip கேமரா அம்சங்கள்

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் இரண்டாம் நிலை 8 எம்பி அல்ட்ராவைட் சென்சார் என இரண்டு கேமராக்களை கொண்டிருக்கலாம். செல்பி மற்றும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கேமராக்கள் ஆனது MariSilicon X சிப் மூலம் இயக்கப்படலாம். சிறந்த நைட் மோட் காட்சி ஆதரவையும் இது வழங்குகிறது. Find N2 Flip ஸ்மார்ட்போனானது 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Oppo Find N2 Flip விலை

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது சீனாவில் ரூ.71,300 என தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.80,000 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக், வயலெட் மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாலும் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் Oppo Find N2 Flip உலகளவில் வெளியிடப்படும் என நிறுவனம் முன்னதாகவே உறுதிப்படுத்தியது.

ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்

ஃப்ளிப் ஸ்மார்ட்போன் பிரிவில் தனியாக சந்தையில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் போனுக்கு எதிராக இது போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே மாதிரியாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோமே என்று புலம்பி தவித்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அறிமுகமானது தான் ஃபோல்டபிள் மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன். சாம்சங் நிறுவனத்தின் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் தனியாக சந்தையில் செயல்பட்டு வந்த நேரத்தில் இதற்கு போட்டியாக ஒப்போ ஃபைன்ட் என் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! விரைவில் இந்தியாவுக்கு வரும் Oppo FindN2 Flip

ஓஎல்இடி கவர் டிஸ்ப்ளே

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இதன் அம்சங்களைக் கணித்துவிடலாம். ஸ்மார்ட்போனானது வளைந்த விளிம்பு பேனல்கள் மற்றும் தட்டையான மெட்டாலிக் கண்ணாடி வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது. இதில் பெரிய 2.26 இன்ச் ஓஎல்இடி கவர் டிஸ்ப்ளேவும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது.

6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

ஃப்ளிப் ஓபன் செய்யும் போதுல்ல இதன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய பெரிய அளவிலான 6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் Oppo Find N2 Flip ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 4என்எம் ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃப்ளிப் ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Oppo Find N2 Flip ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 5,999 (தோராயமாக ரூ.71,200) ஆகவும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 6,999 (தோராயமாக ரூ.83,100) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதே விலைப்பிரிவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oppo Find N2 Flip Global Variant Spotted in Geekbench: Might Launching soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X