Home
Mobile

OPPO அடிச்சான் பாருங்க.. 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மார்ச்.9 க்கு அப்புறம் இதுதான்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனை இறக்கிய ஒரே மாதத்தில் ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஓப்போ நிறுவனம் உறுதி செய்துள்ளது. 7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டிசைன் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை பார்க்கலாம்.

வருகிற மார்ச் 9ஆம் தேதி இந்திய மார்கெட்டில் ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. இதில் 7000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகிய பீச்சர்களும் மற்றும் மார்ச் 9ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு வெளியாக இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

OPPO அடிச்சான் பாருங்க.. 7000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்!

மேலும், ஒயிட் (White) மற்றும் பர்பிள் (Purple) கலரில் கிடைக்க இருக்கிறது. டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது. ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை போலவே டிசைனை பார்க்க முடிகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7400 SoC) சிப்செட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் பெயரும் அடிப்படுகிறது. ஓரிரு நாட்களில் ஓப்போ நிறுவனமே இதை உறுதி செய்துவிடும். மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் கலர்ஓஎஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. முன்னதாக, வெளியான ஓப்போ கே14x 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ கே14x 5ஜி அம்சங்கள் (OPPO K13x Specifications): ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட்டை இந்த ஓப்போ கே14x 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. இதற்கு கிடைக்கும் ஆர்ம் மாலி 57 எம்சி2 ஜிபியு (ARM Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

மேலும், கலர்ஓஎஸ் 16 (Color OS 16) கிடைக்கிறது. ஆகவே, ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் நிச்சயம் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். 6.75 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டமானது, இந்த ஓப்போ கே14x 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. இதே கேமரா சிஸ்டமானது, ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்க வாய்ப்புள்ளது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக இருக்கிறது.

6500mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது. ஆகவே, ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனில் பெரிய பேட்டரி கிடைக்க இருப்பது தெரிகிறது. இதனால், விலையிலும் மாற்றம் இருக்கும். ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இதை ரூ.15,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO K14 5G With 7000mAh Battery 45W Fast Charging To Launching in India on March 9 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X